மன்னார் விவசாயிகளின் பரிதாப நிலை!

mannarமன்னார்: மன்னார் மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய முசலிப் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மறிச்சக்கட்டி, பாலக்குளி, கரடிக்குளி, முள்ளிக்குளம் கிராம விவசாயிகள் தமது விவசாயத்தினை முழுமையாக இழந்து பரிதாபகரமான நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுவரும் பசளை நிவாரணம் கூட இம்மக்களுக்கு வழங்கப்படாத நிலையில் பெரும் நஷ்டத்தை சந்தித்த இம்மக்கள் இயற்கை அனர்த்தத்தினாலும் தமது விவசாயம் அழிக்கப்பட்டும் எவ்வித நிவாரனமும் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தியுள்ளனர்.

சுமார் 1500 ஏக்கர் நிலப்பரப்பில் 400 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிர் செய்கையில் ஈடுபட்வருவதாக தெரிவித்துள்ள கரடிக்குளி விவசாய சங்கம் தங்களுக்கான தீர்வு கிடைக்காத பட்சத்தில் போராட்டங்களை நடத்த நேரிடும் என்று எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.

Published by

Leave a comment