பிரதமர் உட்பட 12 அமைச்சர்கள் நேற்று பதவியேற்பு

rajithaகொழும்பு: பிரதமர் உட்பட 12 அமைச்சர்கள், 4 இராஜாங்க அமைச்சர்களும், 4 பிரதியமைச்சர்களும் நேற்று தமது பதவிகளைப் பொறுப்பேற்றுக்கொண்டனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பதவியேற்பு நிகழ்வு அலரிமாளிகையில் நடைபெற்றது. மத அனுஷ்டானங்களைத் தொடர்ந்து பிரதமர் தனது பதவிகளைப் பெறுப்பேற்றுக்கொண்டார்.

சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன சுகாதார அமைச்சில் பதவியை பொறுப்பேற்றார். இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டி ருந்தனர். அமைச்சருக்கு பால்சோறு ஊட்டி ஜனாதிபதி மகிழ்ச்சியை வெளியிட்டிருந்தார்.

பெருந்தோட்டக் கைத்தொழில்துறை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவும் தனது அமைச்சில் பதவிகளை பொறுப் பேற்றார். துறைமுக அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட அர்ஜூணா ரணதுங்க அமைச்சில் தனது கடமைகளை ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்வில் அவருடைய தாயார் மற்றும் மேல்மாகாணசபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

பெளத்தசாசன அமைச்சராக கரு ஜெயசூரியவும், கிறிஸ்தவ விவகார, அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக ஜோன் அமரதுங்கவும், ஊடகத்துறை அமைச்சராக கயந்த கருணா திலகவும் தமது அமைச்சுக்களில் வைத்து பதவிகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

rajitha
சுகாதார அமைச்சராக கடமையைப் பொறுப்பேற்ற அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பாற்சோறு ஊட்டி மகிழ்கையில்…

நீதி அமைச்சராக விஜயதாச ராஜபக்ஷவும், பிரதி நீதி அமைச்சராக சுஜீவ சேனசிங்கவும், நகர அபிவிருத்தி, நீர்விநியோக மற்றும் வடிகாலமைப்புத்துறை அமைச்சராக ரவூப் ஹக்கீமும் பிரதி அமைச்சராக துனேஷ் கன்கந்தவும், போக்குவரத்து அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார, நெடுஞ்சாலைகள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக கபீர் ஹாசிமும், பிரதி அமைச்சராக இரான் விக்ரமரட்னவும் தமது கடமைகளைப் பொறுப்பேற்றனர். நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துமிந்த திசாநாயக்க, பிரதி அமைச்சர் அனோமா கமகே ஆகியோரும் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக றுவான் விஜயவர்தன பதவியேற்றார். வர்த்தகத்துறை அமைச்சராக ரிஷாட் பதியுதீன் நேற்றுப் பிற்பகல் கொழும்பிலுள்ள அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றார். பெற்றோலிய மற்றும் எரிசக்தித்துறை அமைச்சராக பாட்டலி சம்பிக்க ரணவக்கவும், மின்சாரம் மற்றும் எரிசக்தித்துறையின் இராஜாங்க அமைச்சராக பாலித்த ரங்க பண்டாரவும் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர். இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சராக நிரோஷன் பெரேராவும் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

Published by

Leave a comment