பிஸ்மி இஸ்லாமிய பாடசாலை சிறார்களின் சுதந்திர தின விழா

bismi logoபுவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்

காத்தான்குடி: காத்தான்குடியைத் தலைமையகமாகக் கொண்டு பல்வேறு பிரதேசங்களிலும் இயங்கி வருகின்ற ‘பிஸ்மி’ இஸ்லாமிய பாடசலை மாணவர்களினது சுதந்திர தின விழா நிகழ்வுகள் (04.02.2015) புதன்கிழமை காலை 08:00 மணி தொடக்கம் 10:00 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி 06ம் குறிச்சி, அலியார் ஹாஜியார் வளாகத்தில் அமைந்துள்ள ‘பிஸ்மி’ தலைமையகத்தில் இந்கிழ்வு இடம்பெறும்.

‘புகைத்தலற்ற, போதைப் பொருளற்ற, சிறுவர் துஷ்பிரயோகமற்ற சுதந்திர இலங்கையைக் கட்டியெழுப்புவோம்’ எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள இச்சுதந்திர தின நிகழ்ச்சியில், தேசப்பற்றையும், மேற்படி தொனிப்பொருளையும் பிரதிபலிக்கும் வகையில் பாடசாலைச் சிறார்களின் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவிருப்பதாக பிஸ்மி குழுமத்தின் தவிசாளர் அஷ்ஷெய்க் எம்.பி.எம். பிர்தௌஸ் நளீமி தெரிவித்தார்.

Published by

Leave a comment