வலிகாமம் காணி உரிமையாளர்கள் காணிகளை பதிவு செய்து கொள்ளுமாறு வேண்டுகோள்

requests1ஏ.எல்.எம். தாஹிர்

வலிகாமம்: வலிகாமம் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் உள்ள காணி உரிமையாளர்கள் பிரதேச செயலகங்களுக்கு வந்து தங்களது காணிகளை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வலிகாமம் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் 1000 ஏக்கர் நிலங்களை விடுவிப்பதாக தீர்மானிக்கப்பட்டு மார்ச் மாதம் 23ம் திகதி 430 ஏக்கர் நிலங்களை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரத்துங்க ஆகியோரால் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது.

ஏப்ரல் 10ம் திகதி மிகுதி 570 ஏக்கர் நிலங்களை விடுவிப்பதாக மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் அறிவித்துள்ளார். அதற்கமைய அரசாங்க அதிபர், பிரதேச செயளாலர்கள் இந்த இடங்களை பார்வையிட்டு உரிமையாளர்களிடம் கையளிக்குமுகமாக உரிமையாளர்கள் பிரதேச செயலகங்களுக்கு வந்து பதிவினை மேற்கொள்ளுமாறு  கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

ஏ.எல்.எம். தாஹிர்
ஊடகப் பிரிவு
மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு

Published by

Leave a comment