“பெண்ணின் சதையை உண்ணலாம்”: பொய்யான ஃபத்வாவை மறுக்கிறார் முப்தி அப்துல் அஸீஸ்
– MJ
றியாத்: “பசித்திருக்கும் மனிதன் உண்பதற்கு உணவுகள் இல்லாதபட்சத்தில், பெண்களைக் கொண்டு, பெண்ணின் சதையை உண்ணலாம்” எனும் மார்க்கத் தீர்ப்பு அண்மையில் வெளியாகியதை, வண்மையாககக் கண்டித்திருக்கும் சவுதி அரேபியாவின் சிரேஷ்ட முப்தியான அஷ்செய்ஹ் அப்துல் அஸீஸ், இது இஸ்லாமியர் அல்லாதவர்களால் வெளியிடப்பட்ட போலியான மார்க்கத் தீர்ப்பாகும் என அறிவித்துள்ளார்.
இஸ்லாம் மனித மாமிசத்தை எச்சந்தர்ப்பத்திலும் புசிப்பதற்கு அனுமதிக்கவில்லை. மனித குளத்திற்கு கருணையாகவே ஒவ்வொரு மனிதனும் மதிப்பளித்து வாழ வேண்டும் என இஸ்லாம் வற்புறுத்துகின்றது.
வளைகுடா மற்றும் அதன் அண்மைய பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல்களால் முஸ்லிம் பெயர் தாங்கி அமைப்புக்களாலும், போராட்டக்குழுக்களாலும், அப்பிரதேசங்களிலுள்ள ஆயிரக்கணக்கான பெண்கள் கைதிகளாகவும், அடிமைகளாகவும் உள்ளாக்கப்பட்டு, பாலியல் துஷ்பிரயோகங்களின் பின்னர் கொல்லப்படுகின்றனர். சில பெண்களின் உடல்கள் சிதைக்கப்படுகின்றன.
முப்தி, அஷ்செய்ஹ் அப்துல் அஸீஸ்
இந்நிலையிலேயே பெண்களைக் கொன்று அவர்களின் சதைகளை பசியைப் போக்கிக்கொள்ள உண்ண முடியும் என்ற இஸ்லாமிய பெயரிலான ஓர் புதிய ஃபத்வா தற்பொழுது உலக முஸ்லிம்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது.
இது இஸ்லாத்திற்கு எதிரானவர்களால் இஸ்லாத்தின் பெயரால் வெளியிடப்பட்டுள்ள போலியான ஃபத்வா எனவும், முஸ்லிம்கள் இவ்விடயத்தில் அதிக கவனத்துடன் செயல்படுமாறும் முப்தி அப்துல் அஸீஸ் கேட்டுள்ளார்.
Leave a comment