ஹம்பாந்தோட்டை: பிறந்திருக்கும் புதுவருடத்தில் மஹிந்த குடும்பத்தினர் மொத்தமாக சிவப்பாடையில் மாறியிருந்தனர். மகிந்த ராஜபக்ஷவிற்கு இந்த சிவப்பில் அதிகம் ஈர்ப்பு. ஒரு வேளை சிவப்பு நிறம் ராசியானது என்று யாரேனும் ஜோதிடம் கணித்து கொடுத்தார்களோ என்னமோ தெரியாது சிவப்பின் மீது அவ்வளவு பற்று அவருக்கு.
சந்திரிக்கா அம்மையார் ஆட்சிக்காலத்தில் இருந்தபோது, அரச பேருந்துக்களுக்கு எல்லாம் தனக்குப்பிடித்த சிவப்பு நிறத்தினை பேருந்துகளுக்கு மாற்றி சிவப்புக்கலர் சிங்கிச்சா என்றாக்கியவர், தன்னுடைய கழுத்திலும் ஒரு சிவப்பு நிறத்துண்டை மாட்டியவாறு திரியும் ஒரு பழக்கத்தை உருவாக்கினார்.
இப்போது நீலத்தின் தலைவரும் இல்லை. இலங்கை தேசத்தின் தலைவரும் இல்லை.ஹம்பாந்தோட்டையில் தேர்தல் தோல்வியின் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மஹிந்தர், திடீரென்று தனது ஆடை முழுவதையும் சிவப்பாக மாற்றியுள்ளார்.
நேற்று மஹிந்தவின் இல்லத்தில் இடம்பெற்ற புதுவருட நிகழ்வில் மஹிந்தவின் குடும்பமே சிவப்பு நிறத்தில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Published by



Leave a comment