காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிய கலை கலாசார பண்பாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் பாடசாலையில் தரம் ஒன்பது, பத்து ஆகிய தரங்களில் கல்வி கற்கும் மாணவர்களை தலைமைத்துவ ரீதியில் பயிற்றுவிக்கும் முகமாக ஒருநாள் தலைமத்துவ பயிற்சி முகாம் ஒன்று கடந்த 14-04-2015 நேற்று செவ்வாய்க்கிழமை பாலமுனை கடற்கரை வளாகத்தில் இடம்பெற்றது.
இளைஞர்களை தயார்படுத்துவது அவர்களின் எதிர்காலத்தை தீர்மாணிப்பதற்காக எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இப்பயிற்சி முகாமில் சுமார் 43 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் தலைமைத்துவப் பண்புகள், தலைமைத்துவ ஆற்றல்கள் போன்ற அம்சங்கள் விளையாட்டுக்கள் மூலம் செய்முறை விளக்கங்களுடன் கற்பிக்கப்பட்டன.
அத்தோடு விஷேடமாக வெற்றிகரமான தலைமைத்துவம் எனும் தலைப்பில் விரிவுரை ஒன்றும் உலகை மாற்றிய தலைவர்கள் எனும் தலைப்பில் விசேட உரை ஒன்றும் இடம்பெற்றன.
மாலை வேளையில் மாணவர்களின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் வகையில் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வின் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்படவுள்ளன.
பயிற்சிநெறியின் வளவாளர்களாக இஸ்லாமிய கலை கலாசார பண்பாட்டு கழக உறுப்பினர்களே கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment