-
எம்.ஐ. அப்துல் நஸார்
தம்புள்ளை: பெரிய வெங்காயத்தை விற்பனை செய்ய முடியாது தாம் நிர்க்கதி நிலைக்குள்ளாகி இருப்பதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு பெரிய வெங்காயத்தை விற்பனை செய்வதற்காக வருகை தந்திருந்த விவசாயிகள் தெரிவிக்கின்றனர். பாக்கிஸ்தான் மற்றும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதால் இந்த நிலை தமக்கு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
வெங்காயம் ஒரு கிலோ 30 தொடக்கம் 45 ரூபா விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் வியாபாரிகள் அந்த விலைக்கேனும் தமது உற்பத்திகளைக் கொள்வனவு செய்யாது வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தினை ஒரு கிலோ 25 ரூபா தொடக்கம் 45 ரூபா வரையான விலைக்கு கொள்வனவு செய்வதாகவும் தெரிவிக்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் உள்நாட்டில் உற்பத்தியாகும் வெங்காயம் சந்தைக்கு வரும்போது வெங்காயம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால் தாம் மிகவும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

Leave a comment