ஐ.நா அறிக்கை கடினம் குறைந்ததற்கு நல்லாட்சியின் செயற்பாடுகளே காரணம்

மஹிந்தவின் அரசு ஆட்சியிலிருந்திருந்தால் நாடு பாரிய விளைவுகளைச் சந்தித்திருக்கும்

maithiri-ranil-mangalaகொழும்பு: “ஜனவரி 8 ஆம் திகதிக்கு முன்னர் ஐ. நா. அறிக்கை வெளியிடப்பட்டிருந்தால் நாடும் மக்களும், இன்னும் சில முக்கியஸ்தர்களும் பாரதூரமான விளைவுகளை எதிர்கொண்டிருப்பார்கள்” ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார். ஐ. நா. அறிக்கையின் காரம் (கடினம்) குறைக்கப்பட்டு வெளியிடப்பட்டதற்கு இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளே காரணமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், பிரதம ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் பணிப்பாளர்க ளுடனான சந்திப்பு நேற்று பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள் மங்கள சமரவீர. கயந்த கருணாதிலக, விஜேதாச ராஜபக்ஷ ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மேலும் கூறியதாவது: ஐ. நா. வினால் வெளியிடப்பட்ட அறிக்கை பற்றியும் அதன் உள்ளடக்கம் பற்றியும் மாத்திரமே ஊடகங்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

ஆனால், இந்த அறிக்கை காரம் குறைக்கப்பட்டு வெளியிடப்பட்டு இருப்பதைப் பற்றி எவரும் தெரிவிப்பதாக இல்லையென அவர் தெரிவித்தார். மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை தொடர்பாக அரசாங்கம் ஆரா ய்ந்து வருவதாகவும் அது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளுடனும் மற்றும் முக்கிய தரப்புகளுடனும் பேச்சு நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

இறுதிக் கட்ட போரில் கலந்துகொண்ட படைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் சில மூத்த அரசியல்வாதிகள் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக் குழுவின் அறிக்கை தொடர்பில் அச்சமடைந்திருந்தனர். தங்களுடைய பெயர்கள் வெளிவந்து விடுமோ என்றும் பயணத் தடைகள் மற்றும் வேறுவிதமான நெருக்கு வாரங்கள் தங்களுக்கு ஏற்பட்டுவிடும் என அவர்கள் அஞ்சியிருந்தனர்.

maithiri-ranil-mangala

ஆனால் எவருடைய பெயரும் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. இதற்கு ஸ்ரீலங்காவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமே காரணம் என்று விளக்கமளித்த ஜனாதிபதி, தேசிய அரசாங்கம் எதிர்காலத்தில் சர்வதேச உறவுகளை வளர்த்துக் கொள்ளும் என்றும் உறுதியளித்தார்.

முன்னைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் சர்வதேச நாடுகளிடம் இருந்து இலங்கையைத் தனிமைப்படுத்தியது என்றும் ஆனால் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் சர்வதேச நகர்வுகளுக்கு ஏற்ப செயற்படு வதாகவும் குறிப்பிட்டார். ஜனாதிபதி மேலும் கூறியதாவது;

ஜனவரி 8ஆம் திகதி இந்த நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து உருவான நல்லாட்சி அரசாங்கம் சர்வ தேசத்துடன் நடத்திய பேச்சுவாத்ர்த்தைகள் மற்றும் நல்இலண்ண செயற்பாடுகளால் சர்வதேசத்தில் புதிய முன்னேற்றம் ஏற்பட்டது. இதனை எவரும் மறுக்க முடியாது.

நாம் வெற்றி பெறாவிட்டால் நாட்டுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கும். சுருக்கமாகச் சொன்னால், மஹிந்தவின் அரசு ஆட்சியிலிருந்திருந்தால் நாடு பாரிய விளைவுகளைச் சந்தித்திருக்கும்.

ஐ. நா. அறிக்கை காரம் குறைக்கப்பட்டு, மட்டுப்படுத்தப்பட்ட நிலைமையில்தான் வெளியிடப்பட்டிருக்கிறது. சர்வதேச விசாரணையென்று அவர்கள் எதுவும் கூறவில்லை. ஆனால், சர்வதேச விசாரணையா உள்ளக விசாரணையா என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.

இந்த இரண்டு விசாரணைகளில் ஏதாவது ஒன்றுக்கு நாம் முகம் கொடுத்துத் தான் ஆக வேண்டும். ஆகவே, நாம் கலந்துரையாடல்களை நடத்தி அதற்கான பொறிமுறையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதற்காக நாட்டில் இனவாதத்தைப்பரப்பி நாட்டை தீயவழியில் இட்டுச் செல்ல சில ஊடகங்கள் முயற்சிக்கின்றன. இதற்கு எந்தவகையிலும் இடமளிக்க முடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Published by

Leave a comment