வொஷிங்டன்: தனது வீட்டில் தான் செய்த ஒரு கடிகாரத்தைப் பள்ளிக்கூடத்துக்குக் கொண்டுவந்து, அது ஒரு குண்டு என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு பரபரப்பை ஏற்படுத்திய முஸ்லீம் பதின்பருவ மாணவர் ஒருவர், அமெரிக்க அதிபரின் அலுவலகமான வெள்ளை மாளிகைக்கு சென்று வந்திருக்கிறார்.
அஹமட் மொஹமட் என்ற இந்த 14 வயது மாணவரை, அதிபர் ஒபாமா, தனது வழமையான விண்ணியல் இரவு நிகழ்ச்சிக்கு டிவிட்டர் மூலம் அழைத்திருந்தார். இந்நிகழ்ச்சியின்போது, ஒபாமா பேசுகையில், இளைஞர்கள் மத்தியில் ஆர்வத்தை ஊக்குவிப்பது முக்கியம் , அதை ஒடுக்கக்கூடாது என்றார்.
சூடான் வம்சாவளியினரான இந்த மாணவர் டெக்ஸாஸ் மாகாணத்தில் கடந்த் மாதம் போலி குண்டு வைத்திருந்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment