நூறாணியா பாலர் பாடசாலை 28 வது விளையாட்டு விழா

  • ஏ.எல். டீன்பைரூஸ்

hizbulla nooraniyaகாத்தான்குடி: காத்தான்குடி நூறாணியா பாலர் பாடசாலையின் 28 வது விளையாட்டு விழா தலைவர் எச்.எம். றியாஸ் தலைமையில் இடம்பெற்றது. பிரதம அதிதியாக புணரமைப்பு மீழ்குடியேற்ற ,ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா கலந்து கொண்டார். புதிய காத்தான்குடி நூர் சனசமூக நிலையத்தின் கீழ் இயங்கிவரும் நூறாணியா பாலர் பாடசாலை, 28 வது விளையாட்டு விழா பாடசாலை மைதானத்தில் இடம் பெற்றது.

மேற்படி நிகழ்வின் கௌரவ அதிதிகளாக முன்னால் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான யூ.எல்.என்.எம். முபீன், கே.எல்.எம்.பரீட், காத்தான்குடி பிரதேச கல்வி பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். பதுர்தீன் உட்பட பல அதிதிகள் கலந்து கொண்டனர்.

hizbulla nooraniya

விளையாட்டு நிகழ்வில் தமது திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கான பரிசில்கள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டதுடன் பாடசாலை ஆசிரியைகளுக்கு நினைவுச்சின்னம் வழக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

mubeen hizbullah

Published by

Leave a comment