ஜெனீவா: ஐரோப்பிய எல்லைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளால் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழைய முயற்சித்த ஆயிரக்கணக்கான குடியேறிகள் எல்லைகளைக் கடக்கும் இடங்களிலேயே சிக்கியுள்ளனர். ஸ்லோவேனியா மற்றும் க்ரோயேஷியாவுக்கு இடையிலான, எந்த நாட்டின் கட்டுப்பாட்டிலும் இல்லாத பகுதியில், மழை மற்றும் கடுங்குளிரில், தங்க இடமில்லாமல், குழந்தைகள் உட்பட பல குடும்பங்கள் சிக்கியுள்ளன.
எண்ணிக்கையே இல்லாமல் குடியேறிகளை ஏற்றுக்கொண்டே இருக்க முடியாது என்று ஞாயிறன்று ஸ்லோவேனியா அறிவித்திருந்ததையடுத்து, பால்கன் பகுதி நாடுகளுக்குச் செல்லும் பாதையில் இந்த தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. க்ரொயேஷியாவுக்கு தெற்கே உள்ள செர்பியாவில், குடியேறிகள் நிரம்பிவழியும் நிலையில், பல பேருந்துகள் காத்துக்கிடக்கும் நிலையில் , அங்கு விரக்தியடைந்த குடியேறிகளுக்கும், பல மணி நேரங்களாக பணிப்புரிந்து வரும் காவல் துறையினருக்கும் இடையே சண்டைகள் வெடித்துள்ளன.

Leave a comment