புதிய காத்தான்குடி அப்றார் பள்ளிவாயலில் ஒலிபெருக்கி சாதனம் (amplifier) திருட்டு

  • எம்.ஐ. அப்துல் நஸார்

abrar masjidகாத்தான்குடி: புதிய காத்தான்குடி அப்றார் பள்ளிவாயலில் பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கி சாதனம் (amplifier) திருடப்பட்டுள்ளதாக அப் பள்ளிவாயலின் நம்பிக்கையாளர் சபைச் செயலாளர் ஏ.எல்.நௌபர் தெரிவித்தார். நேற்று காலை இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றிருப்பதாக தெரிவித்த அவர், பள்ளிவாயலினுள் சென்று குறித்த ஒலிபெருக்கி சாதனம் பொருத்தப்பட்டிருந்த அறையினுள் இறங்கி அதனை எடுத்துச் சென்றிருக்கலாம் எனவும் இத் திருட்டு சம்பவத்துடன் ஒன்றுக்கு மேற்பட்டோர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் தெரிவித்தார்.

சுமார் 30,000 ரூபா பெறுமதியான இந்த சாதனம் திருடப்பட்டமை தொடர்பில் காத்தான்குடி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

abrar masjid
அப்றார் பள்ளி, புதிய காத்தான்குடி

இது தொடர்பான தகவல்கள் ஏதும் கிடைத்தால் உடனடியாக காத்தான்குடி பொலீஸ் நிலையத்திற்கோ அல்லது தனது தொலைபேசி இலக்கத்திற்கோ (0776400926) தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களைக் கோருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Published by

Leave a comment