- முஹம்மட் ரிபாக்
முல்லைத்தீவு: முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலையொன்றில் மௌலவி ஆசிரியர் ஒருவர் ஆசிரியர் தின நிகழ்வில் நடனமாடியதாக மௌலவியொருவர் தெரிவித்த கருத்தை தான் வன்மையான கண்டிப்பதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் யாசின் ஜவாஹிர் (ஜனோபர்) தெரிவித்தார்.
இதுபற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஒருவர் பெண் வேடம் போட்டு சந்திரமுகி திரைப்படத்தில் உள்ள ‘ராரா…’ பாடலுக்கு நடனமாடும் காட்சியொன்று வட்ஸ்அப் இல் பரவி வருகின்றது.
அதேநேரத்தில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளில் ஆசிரியர்கள் நடனமாடுவது குறித்த மெலளவியொருவரின் சொற்பொழிவொன்றும் nவியாகியுள்ளது.
குறித்த சொந்பொழிவில் ஆசிரியர் தினத்தன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் மௌலவி ஆசிரியர் பெண் வேட்ம் போட்டு ராரா பாடலை பாடுவதாக தனது விசனத்தை தெரிவித்துள்ளார்.
இவருடைய குறித்த கருத்தினை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு முஸ்லிம் பாடசாலைகள் மாத்திரமே இருக்கின்றன.
குறித்த இரு பாடசாலைகளிலும் ஆசிரியர் தினத்தன்று எதுவிதமான நடனக் காட்சிகளும் இடம்பெறவில்லை. மிகவும் இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்களுடன்தான் இரு பாடசாலைகளிலும் ஆசிரியர் தின நிகழ்வுகள் இடம்பெற்றன என்பதனை சொற்பொழிவாற்றிய மௌலவிக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
குறித்த மௌலவியின் அவதூறு கருத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்திள்ள முஸ்லிம் பாடசாலையின் பெயருக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், முஸ்லிம் மக்கள் மிகவும் வெறுப்புணர்வையும் ஏற்படுத்தியிருக்கிறது.
எனவே, இதுதொடர்பில் குறித்த மெலளவி பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும் என முல்லைத்திவு முஸ்லிம்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
Leave a comment