“ஹிஸ்புல்லாஹ்வை புறக்கணிப்பு செய்ய வேண்டாம்”- நஸீருக்கு பரீட் பகிரங்க வேண்டுகோள்

  • முகம்மட் சஜீ

fareedகாத்தான்குடி: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் அறிமுகப்படுத்தப்பட்ட 1000 பாடசாலைகள் அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் அப்போதய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் தற்போத ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்வினால் முன்னய அரசாங்கத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கினங்க இலங்கையின் எப்பாகத்திலும் அமைக்கப்படாத கூடுதலான எண்ணிக்கை கொண்ட இத்திட்டத்தினூடான கட்டிடங்கள் மட்டக்களப்பு காத்தான்குடி கல்விக் கோட்டத்திலேயே அமைக்கப்பட்டு அன்மையில் திறந்து வைக்கப்பட்டது.

எனினும் திறக்கப்பட்ட அக்கட்டிடங்கள் மீண்டும் தற்போதய கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் ஹாபிசினால் மீள் திறப்பதற்கான நடவடிக்கைகள் இடம் பெற்றுவருவதாக அறிகின்றேன்.

fareed
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம். பரீட்

அதற்காக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன், இக்கட்டிடம் அமைவதற்கு முழு முயற்சி எடுத்த ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்வும் அந்நிகழ்வில் உள்வாங்கப்படவேண்டுமென்ற விடயத்தினை பகிரங்கமாக வேண்டுவதாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம். பரீட் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

Published by

Leave a comment