Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு யாழ் நீதிமன்றம் பிடியாணை

    யாழ்ப்பாணம்: முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் இன்று பிடியாணை உத்தரவு பிறப்பித்திருக்கின்றது. ஜேவிபி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து பிரிந்து சென்ற கட்சியாகிய பெரட்டுகாமி என்ற கட்சியின் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த போது, லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி காணாமல் போயிருந்தனர்.

  • ஸபர் மாத தலைப்பிறை

    மெளலவி.MAM.மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி) கொழும்பு: நேற்று (வியாழன்-12/11/1015) மாலை ஸபர்மாத தலைப்பிறை பார்க்கும்படி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டி இருந்தது. இலங்கையின் எப்பாகத்திலும் பிறை தென்படாத படியால், இன்று 13/11/2015 மாலை முதல் ஹிஜ்ரி-1437 ஸவ்வால்- பிறை-1 என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அறிவித்துள்ளது.

  • “சிகரட் விற்பதும், வாங்குவதும், குடிப்பதும் ஹராம்” காத்தான்குடியில் சுவரொட்டிகள்

    ஜுனைட். எம். பஹ்த்

  • வெபர் மைதான அபிவிருத்தி வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டு விரைவில் திறந்துவைக்க பிரதி அமைச்சர் ஹரீஸ் நடவடிக்கை

    ஹாசிப் யாஸீன், எம்.எம். ஜபீர் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசனின் அழைப்பின் பேரில் மட்டக்களப்பு மாவட்டத்தின் விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் நேற்று (12) வியாழக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்தார்.

  • ரணில்-ரவி: தொடரும் எதிரும் புதிரும்….

    கொழும்பு: பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.இவ்வாறான சூழ்நிலையில், இலங்கை காப்புறுதி நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியாக நிதியமைச்சர் நியமித்த அவரது உறவினரை நீக்கி விட்டு, பிரதமர் வேறு ஒருவரை நியமித்துள்ளார்.

  • 13 பில்லியன் டொலர்கள் வர்த்தக ஒப்பந்தம் -இந்தியா, பிரிட்டன் அறிவிப்பு

    லண்டன்: பிரிட்டிஷ் மற்றும் இந்திய நிறுவனங்களிடையே 13 பிலியன் டொலர்களுக்கும் மேலான பெறுமதியான புதிய வர்த்தக ஒப்பந்தங்களை பிரிட்டிஷ் மற்றும் இந்தியப் பிரதமர்கள், டேவிட் கமரனும் நரேந்திர மோடியும் அறிவித்திருக்கிறார்கள்.இந்த ஒப்பந்தங்களுக்கான அறிவிப்பை பிரிட்டன் வந்திருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், டேவிட் கேமரனும் கூட்டாக லண்டனில் நடத்திய ஒரு செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டனர்.

  • “நிறைவேற்று முறைமையை ஒழிப்பேன்”- ஜனாதிபதி

    கொழும்பு: நல்லாட்சி, நீதி, நியாத்துக்கான சமூகத்தை உருவாக்குதல் மற்றும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் போன்ற விடயங்களில் மிக அதிக எதிர்பார்ப்புடன் செயற்பட்டவரே சோபித தேரர் என தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பேன் என, அன்னாரின் தேகத்திற்கு முன்னால் சபதமிட்டு கூறினார்.

  • ரிசாத் கொஞ்சம் தாமதித்து செல்லுங்கள்! மைத்திரியின் இரண்டாவது சந்திப்பு!!

    ஏ.எச்.எம். பூமுதீன் கொழும்பு: வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் அதன் தற்போதைய நிலை தொடர்பிலான ஜனாதிபதி மைத்திரிக்கும் அமைச்சர் ரிசாதுக்குமிடையிலான விசேட சந்திப்பு நேற்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. ஒக்டோபர் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது, வடமாகாண முஸ்லிம்களின் விடயத்தில், அரசு மாற்றான்தாய் மனப்பாங்கோடு செயற்படுவதாக கடும் தொணியில் ஆக்ரோசமாக ரிசாத் பதியுதீன் குற்றம் சாட்டியிருந்தார்.

  • தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபை ஏற்பாட்டில் புத்தகக் கண்காட்சியும் மலிவு விற்பனையும்

    எம்.ஐ. அப்துல் நஸார் மட்டக்களப்பு: தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு வாசிப்பை நேசிப்போம் புத்தகங்களை நண்பனாக்குவோம் என்ற தொனிப் பொருளில் மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் புத்தகக் கண்காட்சியும் மலிவு விற்பனையும் இம்மாதம் 14,15 மற்றும் 16ஆந் திகதிகளில் முற்பகல் 09.00 மணி தொடக்கம் பிற்பகல் 08.00 மணி வரை மட்டக்களப்பு மாநகர மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

  • சோபித தேரர்

    அதிகார வெறிகொண்ட சதிகாரக் குழுவுக்கு எதிராகப் போராடி உதிராத புகழ் கொண்டோன் தொப்பித் தலமைகள் தப்ப வழி தேட, தப்புக்கெதிராய் சிப்பாய் போல் நின்றவன் காவி உடை கொண்ட பாவிகளுக்கெதிராய் ஆவி நீங்கும் வரை மாவீரனாய் வாழ்ந்தவன்.

  • வெளிநாடுகளில் தொழில் புரியும் சகோதர சகோதரிகளின் நலன்கள் குறித்து இந்த அரசு கூடிய கவனம் செலுத்துதல் வேண்டும்

    மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் கொழும்பு: சவூதி அரேபியா மற்றும் லெபனானில் பணியாற்றும் இலங்கையைச் சேர்ந்த 09 பெண்களுக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றங்களில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபிய நீதிமன்றங்களின் தீர்ப்புக்களின் பிரகாரம், இலங்கையின் பெண்கள் சிலர் கல்லெறிந்து கொல்லப்படும் நிலைக்கு உள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள மேலும் தெரிவித்துள்ளார்.

  • முஸ்லிம் அதிகாரிகளுக்கான வெற்றிடங்கள் நிறைந்தும், ​மத்தியும் – மாகாணமும் ஒத்துப்போவது எப்போது?

    –இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கேள்வி திருகோணமலை: கல்வி அமைச்சில் வெற்றிடமிருக்கையில், இலங்கை கல்வி நிர்வாக சேவையைச் சேர்ந்த உத்தியோகத்தர்களை மாகாண மற்றும் தேசியபாடசாலைகளின் அதிபர் பதவிகளுக்கு விடுவித்தும், நியமித்தும் வருகின்றது, மத்திய – நிரல் கல்வி அமைச்சு.

←Previous Page
1 … 287 288 289 290 291 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar