Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • அவன்ட்கார்ட் ஆயுதக்கப்பல் நிறுவனத்துக்கு தடை

    கொழும்பு: அவன்ட்காட் நிறுவனத்தை உடனடியாக தடை செய்து அதனுடன் தொடர்புடைய அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் கடற்படையினரிடம் கையளிக்கும்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.அவன்ட்காட் விவகாரம் தொடர்பில் முடிவு ஒன்றை எட்டுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடந்த விசேட கலந்துரையடலையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

  • ஈஃபில் கோபுரத்தின் கம்பிகளைப் பிடித்து ஏறி சாகசம்- அசத்தும் காணொளி

    பரிஸ்: உயரமான இடங்களில் பாதுகாப்பு உபகரணங்களின்றி ஏறுவதை தனது சாகசப் பொழுதுபோக்காகக் கொண்ட பிரிட்டிஷ் இளைஞர் ஒருவர் பரிசின் புகழ் பெற்ற ஈஃபில் கோபுரத்தில் இது போல ஏறியதை வீடியோப்பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான பிரிட்டிஷ் இளைஞர் ஜேம்ஸ் கிங்ஸ்டன் இந்த கோபுரத்தின் மீது கம்பிகளைப் பிடித்தவாறே ஏறியதை விடியோக் காட்சிகளாக்கியிருக்கிறார். இதற்கான அனுமதியை அவர் பெறவில்லை. பாதுகாப்புக் கருவிகளையும் அவர் வைத்திருக்கவில்லை.

  • மது போதையில் வாகனம் செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மது போதையில் வாகனம் செலுத்துவோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து காணப்படுவதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஆர்.ஜி.துஷார திலங்க ஜெயலால் தெரிவித்தார்.

  • கெக்கிராவ வங்கிக் கொள்ளை: திருடனும் பாதுகாப்பு உத்தியோகத்தரும் பலி

    கெக்கிராவை: கெக்கிராவை தனியார் வங்கி ஒன்றில் இன்று (11) நபர் ஒருவர் கொள்ளையிட முயற்சி செய்த வேளையில் குண்டொன்று வெடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் கொள்ளையிட முயன்றபோது, அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் அவரை தடுக்க முயன்றுள்ளார்.

  • சர்வதேச அறபு மொழி தினம்

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: சர்வதேச அறபு மொழி தினத்தை முன்னிட்டு காத்தான்குடி மஃஹதுஸ் சுன்னா அந்நபவிய்யா மகளிர் அறபுக் கல்லூரி நேற்று 10 செவ்வாய்க்கழமை சர்வதேச அறபு மொழி தினப் போட்டிகளை மஃஹத் வளாகத்தில் நடாத்தியது.

  • கல்லூரி மாணவியை காரினால் அடித்து விட்டு தப்பிச் சென்றவர்கள் கைது!

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மஞ்சந்தொடுவாய் பிரதான வீதியில் மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக் கல்லூரிக்கு முன்பாக நேற்று 9 திங்கட்கழமை பிற்பகல் வீதியில் நின்ற கல்லூரி மாணவி ஒருவரை மோட்டார் காரினால் அடித்து விட்டு தப்பிச் சென்ற கார் உரிமையாளரையும் அதில் பயணித்த இருவர்களையும் காத்தான்குடி போக்குவரத்து பொலிசார் கைது செய்துள்ளனர்.

  • மூளைக்காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசி:ஆபிரிகாவில் சாதனை

    நைரோபி: ஆபிரிக்காவில் மூளைக்காய்ச்சலுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட தடுப்பூசி நடவடிக்கை மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.காம்பியா தொடங்கி எத்தியோப்பியா வரையிலான 16 நாடுகளில் மெனின்ஜிட்டிஸ்-ஏ எனும் மூளைக்காய்ச்சல் நோய்க்கு எதிராக 200 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

  • “இந்த நாட்டின் நல்லாட்சியை உருவாக்குவதில் தனது இறுதி மூச்சு வரை தன்னை அர்ப்பணித்தவர் சோபித தேரர்”- காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா

    எம்.ஐ. அப்துல் நஸார் காத்தான்குடி: இந்த நாட்டின் நல்லாட்சியை உருவாக்குவதில் தனது இறுதி மூச்சு வரை தன்னை அர்ப்பணித்தவர் சோபித தேரர் அவர்கள் என சோபித தேரரின் மறைவையொட்டி காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அந்தநாள் ஞாபகம்-10: இந்திய அமைதிப்படையும் காத்தான்குடி சுற்றிவளைப்பும்

    MJ காத்தான்குடி: 1987-1990, இந்திய அமைதிப்படையினர் வட கிழக்கில் நிலைகொண்டிருந்த காலப்பகுதி. வடகிழக்கு மக்களை விட இந்திய அமைதிப்படையினரின் எண்ணிக்கை அதிகம் என மக்களால் உவமானமாகக் கூறப்பட்ட நேரம்.

  • மக்களின் வாக்குரிமையை உறுதிப்படுத்த அரசியல் தலைவர்கள் முன்வர வேண்டும்

    ரஸீன் ரஸ்மின் மன்னார்: தேர்தல்களை அவசரமாக நடத்துங்கள் என்று கோரிக்கை விடுக்கின்ற அரசியல் தலைமைகள் தேர்தலுக்கு அடிப்படையான வாக்குரிமை தொடர்பில் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை என்பது பெரும்பாலான மக்களின் ஆதங்கமாக இருக்கிறது.வடக்கு முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் காணிப்பிரச்சினைகள் என்பன தொடர்பில் ஒக்டோபர் மாதத்தில் நினைவுகூர்ந்தது நீங்கள் அறிந்த விடயமே. எனினும் வடமாகாணத்தில் உள்ள முல்லைத்திவு மாவட்ட முஸ்லிம் மக்கள் காணிப்பிரச்சினை மற்றும் வீட்டுப்பிரச்சினை என்பவற்றுக்கு அப்பால் வாக்குரிமையும் ஒரு பிரதானமான பிரச்சினையாகவே இருக்கிறது.

  • கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை குப்பை கொட்டும் இடத்தினை துப்புரவு செய்யாமை தொடர்பில் மக்கள் விஷனம்:நடவடிக்கை எடுக்கப்படுமா?

    எம்.ரீ. ஹைதர் அலி மட்டக்களப்பு: கடந்த 2015.10.29ஆந்திகதி (புதன்கிழைமை) ”வீதிப்போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் குப்பை கூழங்கள் மற்றும் யானைகளின் அட்டகாசம்” எனும் தலைப்பில் ஒரு செய்தி பல இணையத்தளங்களிலும், பத்திரிகைகளிலும் பிரசுரமாகியிருந்தது. மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள காரமுனைக் கிராமத்திற்குச் செல்லும் மியான்குள காரைமடு வீதியில் கோறளைப்பற்று மேற்கு மற்றும் கோறளைப்பற்று ஆகிய இரு பிரதேச சபைகளினால்

  • முஸ்லிம்களின் வெளியேற்றம் இனச்சுத்திகரிப்பு அல்ல

    சுஐப் எம். காசிம் கொழும்பு: வடபுல முஸ்லிம்கள் வடபுலத்தை விட்டுப் புலிகளால் வெளியேற்றப்பட்ட இருபந்தைந்து ஆண்டு நிறைவையொட்டி முஸ்லிம் காங்கிரஸ் கொழும்பி;ல் ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கிற்கு யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுமந்திரனும் அழைக்கப்பட்டிருந்தார்.

←Previous Page
1 … 288 289 290 291 292 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar