ரணில்-ரவி: தொடரும் எதிரும் புதிரும்….

RanilWickramasinghe[1]raviகொழும்பு: பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.இவ்வாறான சூழ்நிலையில், இலங்கை காப்புறுதி நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியாக நிதியமைச்சர் நியமித்த அவரது உறவினரை நீக்கி விட்டு, பிரதமர் வேறு ஒருவரை நியமித்துள்ளார்.

பிரதமர் நியமித்த நபர் இலங்கை காப்புறுதி நிறுவனத்திற்கு சென்ற போது, நிதியமைச்சரின் ஆதரவாளர்கள் அவரை அடித்து விரட்டியடித்துள்ளதாக பேசப்படுகிறது.இந்த சம்பவம் காரணமாக நிதியமைச்சருக்கும் பிரதமருக்கும் இடையிலான முரண்பாடுகள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்காக எவ்விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத நபரான கீத் பேர்னாட் என்பவரை, பிரதமரின் பரிந்துரையின் அடிப்படையில், அரச நிறுவனங்கள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹசிம், இலங்கை காப்புறுதி நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியாக நியமித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த நிதியமைச்சின் ஆதரவாளர்களே தாக்குதல் நடத்தி விரட்டியுள்ளனர்.

இலங்கை காப்புறுதி நிறுவனத்தின் தலைவர் ஹேமக அமரசூரியவை விலகிக்கொள்ளுமாறு அறிவிக்காததே அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் கோபத்திற்கு காரணம் எனக் தெரிவிக்கப்படுகிறது. அமரசூரியவையும் பிரதமரே நியமித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் பிரதமருக்கும் நிதியமைச்சருக்கும் இடையில் முரண்பாடுகள் இருப்பதாக கூறப்பட்டாலும் அப்படியான எந்த முரண்பாடுகளும் இல்லை என அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Published by

Leave a comment