- எம்.ஐ. அப்துல் நஸார்
மட்டக்களப்பு: தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு வாசிப்பை நேசிப்போம் புத்தகங்களை நண்பனாக்குவோம் என்ற தொனிப் பொருளில் மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் புத்தகக் கண்காட்சியும் மலிவு விற்பனையும் இம்மாதம் 14,15 மற்றும் 16ஆந் திகதிகளில் முற்பகல் 09.00 மணி தொடக்கம் பிற்பகல் 08.00 மணி வரை மட்டக்களப்பு மாநகர மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்தக் கண்காட்சியில் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தின் பிரபல புத்தகசாலையான பூபாலசிங்கம் புத்தகசாலையின் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ளன.

இதற்கான விரிவான ஏற்பாடுகளை மட்டக்களப்பு பொது நூலகம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment