Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ஒழுக்க சீர்கேடு: இரசிகர்களிடம் மன்னிப்புக் கோரிய மஹேல, சங்கா

    கொழும்பு: ‘லைவ் இவன்ற்ஸ் ஶ்ரீ லங்கா’ நிறுவனத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர்களான முன்னாள் இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர்களான சங்கக்கார மற்றும் மஹேல, இரசிகர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளனர். இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சங்கக்கார மற்றும் மஹேல, 200 இற்கும் மேற்பட்ட பல்வேறு விருதுகளை வென்ற ‘கிங் ஒப் லத்தீன்’ (King of Latin) என அழைக்கப்படும் இலத்தீன் மொழி பாடகரான, ஸ்பானிய நாட்டின் என்றிக் இக்லிசியஸின் இசை நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகளை கொள்வனவு செய்தோருக்கு இழப்பீடு வழங்கவும்…

  • வரலாற்றில் முதல் தடவையாக கெகுணகொல்ல தேசிய பாடசாலை பழைய மாணவர் ஒன்று கூடல்

    ரிம்சி ஜலீல் கெகுணகொல்ல: இலங்கயைில் முதன்மையான பாடசாலையில் ஒன்றான கெகுணகொல்ல தேசிய பாடசாலையின் வரலாற்றில் முதல் தடவையாக பழைய மாணவர் ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டு இன்று பொதுக் கூட்டம் நடைபெற்றது.நூற்றாண்டை நோக்கிய முன்னெடுப்புக்கள் மிக மும்முரமாக அரங்கேறி வரும்இத்தருணத்தில் அதன் ஒரு அங்கமாக பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் அல்லாஹ்வின் அருளால் 27 டிசம்பர் 2015 ஞாயிற்றுக்கிழமை மு.ப. 10.30 க்கு பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

  • ஜனவரி 01 முதல் ஜீன்ஸ், லெகின்ஸ், அணிய தடை

    சென்னை: ஜீன்ஸ், லெகிங்ஸ், டிரவுசர் போன்ற ஆடைகள் அணிந்து வருபவர்களை பாரம்பரியமிக்க கோயில்களுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று அறநிலையத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த ஆடைக் கட்டுப்பாடு வரும் ஜனவரி 1ஆம் திகதி அமுலுக்கு வருகிறது. உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  • 8.2 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்த நியுசிலாந்து!

    கிறிஸ்ற்சேர்ச்: நியூஸிலாந்து சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 5 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகின்றது. அந்த வகையில் இன்று (28) இடம்பெற்ற 2 ஆவது ஒரு நாள் போட்டியில் நியூஸிலாந்து அணியிடம் மிக மோசமான தோல்வியைச் சந்தித்தது. கிறிஸ்ற்சேர்ச்சில் இடம்பெற்ற இன்றைய போட்டியிலும் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி சகல விக்கெட்டுகளையும் இழந்து, 117 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

  • வெள்ளத்தால் மூழ்கியிருக்கும் ஆங்கில தேசத்தின் புகைப்படங்கள்

  • “பெண்கள் மார்புக் கச்சையை கழற்றி மேடையை நோக்கி வீசும் ஒழுக்கக்கேடான செயற்பாடுகள் ஒழிக்கப்படும்”: ஜனாதிபதி

    அம்பாறை: கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற வெளிநாட்டு கலைஞரொருவரின் பங்குபற்றலில் இடம்பெற்ற இசைநிகழ்ச்சியின் போது பெண்கள் மார்புக் கச்சையை கழற்றி மேடையை நோக்கி வீசியதாகவும், இவ்வாறான ஒழுக்கக்கேடான நிகழ்ச்சிகள் இதன்பின்னர் நடத்தப்படுவதற்கு அனுமதியளிக்கப்போவதில்லையெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததுடன் இந்நிகழ்ச்சி தொடர்பில் ஜனாதிபதி கடுமையாக விமர்சித்திருந்தார்.

  • ஊக்கமருந்து: பாக். கிரிக்கெட் வீரர் யாஸிர் ஷா இடைநீக்கம்

    லாஹூர்: ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யாஸிர் ஷாவை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளது. பந்துவீச்சாளர் யாஸிர் ஷாவின் உடலில் தடைசெய்யப்பட்ட குளோர்தலிடோன் (chlorthalidone) எனப்படும் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து இருந்துள்ளது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊடக அறிக்கை கூறுகின்றது.

  • அரிசி இறக்குமதியில் 400 மில்லியன் மோசடி

    கொழும்பு: கடந்த அரசின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 400 மில்லியன் ரூபாய் பெறுமதியான அரிசியில் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளமை தெரிய வந்துள்ளது. கொழும்பில் உள்ள கோடிஸ்வர வர்த்தகர் ஒருவர் ஊடாக கொழும்பு துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட இந்த அரிசி, சுமார் 300 கொள்கலன்களில் எங்குக் கொண்டு செல்லப்பட்டது என்பது பற்றி இதுவரை கண்டுப்பிடிக்கபடவில்லை என அரச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

  • தாஜூடீன் கொலையாளி கைது செய்யப்படுவதை தடுக்கும் அரசின் அந்த முக்கிய நபர் யார்…?

    கொழும்பு: பிரபல ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்படவிருந்த போதிலும், அரசாங்கத்தின் முக்கிய நபரின் அழுத்தம் காரணமாக அவர் கைது செய்யப்படுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வரவு செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பு நடத்தும் நேரத்தில் கைது செய்ய வேண்டாம் என அந்நபர் தெரிவித்துள்ளார்.

  • அமைச்சர் ரிஷாத்தின் சவாலை ஏற்றார் ஆனந்த தேரர்

    கொழும்பு: தன்மீது சுமத்தப்பட்ட அவதூறுகளை நிரூபிக்க பகிரங்க விவதாத்திற்கு வருமாறு அமைச்சர் றிசாத் பதியுத்தீன், மாத்தறை ஆனந்த தேரருக்கு விடுத்த பகிரங்கச் சாவாலை தேரர் ஏற்றுக் கொண்டுள்ளார்.இதனையடுத்து ஆனந்த தேரருடன் விவாதிப்பதற்கு தான் தயாரென அமைச்சர் ரிஷாத் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் 28ஆம் திகதி திங்கட்கிழமை தனியார் தொலைக்காட்சி ஒன்றில் விவாதத்தை நடத்த ஏற்பாடாகியுள்ளது.

  • சிரிய ராணுவ வான் தாக்குதலில் உள்ளுர் போராட்டக்குழுத் தலைவர் கொல்லப்பட்டார்

    டமஸ்கஸ்: சிரியாவில் வெள்ளியன்று தாம் நடத்திய வான்தாக்குதலில் அரசுக்கு எதிரான கிளர்ச்சி குழுவின் மூத்தத் தலைவர்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக சிரியாவின் இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த வான் தாக்குதல்கள் ரஷ்ய போர்விமானங்களால் நடத்தப்பட்ட தாக்குதல் என்று சிரிய மனித உரிமை செயற்பாட்டாளர்கள் முன்னர் தெரிவித்திருந்தனர்.

  • சஊதியா சின்னம் மாற்றப்பட்ட வரலாறு

    MJ றியாத்: 1980 காலப்பகுதியில் நடைமுறையில் இருந்துவந்த சஊதி அரேபியன் எயார் லைன்ஸ் “சஊதியா” என அழைக்கப்பட்டு வரும் சஊதி அரசாங்கத்தின் விமான சேவையின் சின்னத்திற்குள் (Logo) அன்று சிலுவை மறைமுகமாக உட்புகுந்ததால், அந்த சின்னம் உடனடியாக மாற்றப்பட்டது.

←Previous Page
1 … 263 264 265 266 267 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar