ஊக்கமருந்து: பாக். கிரிக்கெட் வீரர் யாஸிர் ஷா இடைநீக்கம்

yasir shah pakistanலாஹூர்: ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யாஸிர் ஷாவை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளது. பந்துவீச்சாளர் யாஸிர் ஷாவின் உடலில் தடைசெய்யப்பட்ட குளோர்தலிடோன் (chlorthalidone) எனப்படும் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து இருந்துள்ளது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊடக அறிக்கை கூறுகின்றது.

முழுமையான விசாரணைகள் முடியும் வரை வேறு தகவல்கள் எதுவும் வெளியாகாது என்று கூறப்பட்டுள்ளது.யாஸிர் ஷாவிடமிருந்து இது தொடர்பில் விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. 29 வயதான யாஸிர் ஷா கடந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். பல தடவைகள் ஆட்டங்களின் வெற்றிக்கு காரணமாகவும் இருந்துள்ளார்.

yasir shah pakistan

Published by

Leave a comment