டமஸ்கஸ்: சிரியாவில் வெள்ளியன்று தாம் நடத்திய வான்தாக்குதலில் அரசுக்கு எதிரான கிளர்ச்சி குழுவின் மூத்தத் தலைவர்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக சிரியாவின் இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த வான் தாக்குதல்கள் ரஷ்ய போர்விமானங்களால் நடத்தப்பட்ட தாக்குதல் என்று சிரிய மனித உரிமை செயற்பாட்டாளர்கள் முன்னர் தெரிவித்திருந்தனர்.
தலைநகர் டமஸ்கஸில் கிளர்ச்சிக்குழுக் கட்டுப்பாட்டில் இருந்த மாவட்டம் ஒன்றில், அந்த கிளர்ச்சிக்குழு தலைமையகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூத்தத் தலைவர் ஸஹ்ரூன் அலூஷ் உட்பட பல தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
சிரியாவில் கடந்த செப்டம்பரில் ரஷ்ய வான் தாக்குதல்கள் தொடங்கப்பட்டதிலிருந்து கொல்லப்பட்டிருக்கும் முக்கிய கிளர்ச்சித் தலைவர் அலூஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸஹ்ரூன் அலூஷ்
இக்குழுவினர் சிரியாவின் ஆளும் அரசாங்கப் படையான பஸர் ஆதவுப் படையினரையும், ஐ.எஸ். தீவிரவாதிகளையும் இரு முணைகளில் எதிர்த்துவரும் மிகச் சிறந்த போராட்டக் குழுவாகும்.
ஜெய்ஷ் அல் இஸ்லாம் என்ற அவரது கிளர்ச்சிக்குழு சஊதி அரேபியாவிடமிருந்து பலத்த ஆதரவைப்பெற்றுவருகிறது.ஆனால் அதை ஒரு பயங்கரவாத அமைப்பாக ரஷ்யா கருதுகிறது. அந்தக் குழு இஸ்ஸாம் அல்-புவேதானி என்பவரை புதிய தலைவராக அறிவித்துள்ளது.