“ரி-20 உலகக் கோப்பை போட்டியில் இலங்கை அணி பிரகாசிக்கும்”

Lasith-Malinga[1]டாக்கா: இந்த மாதம் இந்தியாவில் ஆரம்பமாக உள்ள ரி-20 உலகக் கோப்பை போட்டிகளில், தான் விளையாட உள்ளதாக இலங்கையின் மூத்த வீரர் லசித் மலிங்க ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கிறார்.இலங்கை கிரிக்கெட் அணி, அண்மைய நாட்களாக போட்டிகளில் பிரகாசிக்க தவறி வரும் நிலையில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

உடல் உபாதை காரணமாக இலங்கை அணியின் லசித் மலிங்க போட்டிகளிலிருந்து ஓய்வெடுத்து வருவது இலங்கை அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருந்ததாக கிரிக்கட் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

லசித் மலிங்கவின் பாதத்தில் ஏற்பட்டுள்ள உபாதையே, போட்டிகளில் அவர் பங்குபெற முடியாமல் போனதற்கு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Lasith-Malinga[1]

“நான் உலகக் கோப்பை போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதை, அணியில் உள்ள அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்” என்று தெரிவித்த லசித் மலிங்க, தற்போது தான் சிகிச்சை பெற்று வருவதாகவும், உலகக் கோப்பை போட்டிகளில் தன்னால் சிறந்த முறையில் விளையாட முடியும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் கூறினார்.

கடந்த ஏழு ஆண்டுகளில், தாம் பங்குபற்றிய ஐந்து உலகக் கோப்பை போட்டிகளில், இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றதை நினைவுபடுத்திய அவர், இனிவரும் போட்டிகளிலும் தமது அணி சிறப்பாக விளையாடும் என்ற நம்பிக்கை தனக்கு இருக்கிறது என்று கூறினார்.

Published by

Leave a comment