கோறளைப்பற்று: மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிராமமான காரமுனை ஜூம்ஆ பள்ளிவாயலுக்கான புதிய நிருவாக சபைத் தெரிவு 2016.03.04ஆந்திகதி வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகையின் பின் காரமுனை ஜூம்ஆ பள்ளிவாயலில் நடைபெற்றது. இந்நிருவாகத் தெரிவானது அன்றைய தினம் ஜூம்ஆ குத்பா உரையாற்றிய எம்.யூ. மஜீட் (சிறாஜி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிறுவாகத் தெரிவில் உரையாற்றிய அவர்,
தெரிவு செய்யப்படுகின்ற நிருவாக உறுப்பினர்கள் ஐந்து நேரமும் இப்பள்ளிவாயலில் தொழுக்கூடியவர்களாகவும், இக்கிராமத்தில் வசிக்கக்கூடியவர்களாகவும் இருத்தல் வேண்டும். அத்தோடு நிருவாகத்தில் தெரிவு செயய்ப்படுகின்ற உறுப்பினர்கள் இப்பள்ளிவாயலை தூய்மையான முறையில் பாரமரிப்பவர்களாகவும், அல்லாஹ்வைத்தவிர ஏனையோருக்கு அஞ்சி நடக்காத இறையச்சமுள்ளவர்களாக இப்பள்ளிவாயலை நிருவகிக்க கூடியவர்களாக இருத்தல் வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து புதிய நிருவாக சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
நிருவாக சபை விபரம்
தலைவர் – கே. அஸனார்
உபதலைவர் – ஏ.எம். முஹம்மது காசிம்
செயலாளர் – எஸ். நளீம்
உபசெயலாளர் – எம்.எஸ். அஸ்மி
பொருளாளர் – எச்.எம். தாஹா
உறுப்பினர்கள்
சுபைர், புஹாரி முஹம்மட், அப்துல் பதாஹ், முஹம்மது இஸ்மாயில்
ஆலோசகர் – அப்துல் சலாம் (முன்னாள் ஜூம்ஆ பள்ளிவாயல் தலைவர்)
தகவல்:
செய்தியாளர்
எம்.ரீ. ஹைதர் அலி

Leave a comment