220 பயணிகளுடன் விமானத்தை தரையிறக்குகையில் சவுதி விமானி மாரடைப்பால் மரணம்

  • SHM

saudi arabian planeரியாத்: சவுதி அரேபியாவில் சவுதி அரேபியன் விமானம் ஒன்று தரையிறங்குகையில் விமானி மாரடைப்பால் மரணம் அடைந்தார். துணை விமானி விமானத்தை பத்திரமாக தரையிறக்கியதால் விபத்து தவிர்க்கப்பட்டது. சவுதி அரேபியாவில் உள்ள பிஷா நகரில் இருந்து சவுதி அரேபியன் நிறுவன விமானம் 220 பயணிகளுடன் ரியாத் நகருக்கு புறப்பட்டது. விமானத்தை விமானி வலித் பின் முகமது அல் முகமதுஇ ரியாத் நகரில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்க முயன்றார்.

அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். வலித் மயங்கிவிட்டார் என்று நினைத்த துணை விமானி ராமி காசி பாதாபரா, விமானத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பத்திரமாக தரையிறக்கினார்.

Published by

Leave a comment