Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • சிகரத்தில் சிறுமி (07) துஷ்பிரயோகம் 15 வயது சிறுவன் கைது

    காத்தான்குடி: 7 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 15 வயதுடைய சிறுவன் நேற்று (02) மாலை காத்தான்குடி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி பிரதேசத்தின் சிகரம் கிராமத்தில், தரம் இரண்டில் கல்வி கற்கும் 7 வயதுடைய சிறுமியொருவர் காத்தான்குடியைச் சேர்ந்த சிறுவன் ஒருவனினால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.

  • சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி கர்ப்பிணி

    பொகவந்தலாவ: பொகவந்தலாவ பிரதேசத்தில் பாடசாலை மாணவியொருவரை கர்ப்பமாக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி என தெரியவந்துள்ளது. மேலும், குறித்த சிறுமி நோய் காரணமாக வைத்தியசாலையில் அனுமதித்த பின்னரே கர்ப்பிணி என தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

  • பாராளுமன்றில் அடிதடி: சமரசிங்க வைத்தியசாலையில்!!

    கொழும்பு: நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, அவை நடவடிக்கைகள் 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.மஹிந்தவின் பாதுகாப்பு தொடர்பாக ஏற்பட்ட பேச்சுவார்த்தை வாய்த்தர்க்கமாக மாறி அடிதடியில் முடிந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு குறித்து, பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் தெரிவிக்கப்பட்ட சில கருத்துக்கள் காரணமாகவே இந்த குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

  • பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் முயற்சியினால் கடற்கரை வீதி தற்காலிகமாக செப்பனிடப்பட்டது

    காத்தான்குடி: காத்தான்குடி கடற்கரை வீதியின் பல இடங்களிலும் குறிப்பாக கடற்கரை வீதியில் அமைந்துள்ள இரு பாலங்களுக்கு அன்மையிலும் வீதி சேதமடைந்து குன்றும் குழியுமாக உள்ளதனால் தொடர்ச்சியாக விபத்துக்கள் ஏற்படுவது மட்டுமன்றி மக்கள் பல்வேறு சிரமங்களையும் எதிர்நோக்குகின்றனர். இவ்விடயம் தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் கடந்த 25.04.2016ஆந்திகதி (திங்கட்கிழமை) குறித்த இடத்திற்கு நேரில் சென்று நிலைமையை பார்வையிட்டதோடு, நகர சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களையும் நேரில் வரவழைத்து நிலைமையினை சுட்டிக்காட்டி விரைவாக எடுக்கப்பட…

  • இளைஞர் ஊடகப் பேரவை அமைப்பு உதயம் – இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

    இளம் ஊடக செயற்பாட்டாளர்களின் ஊடகம் சார் வலுவினை மேம்படுத்தும் நோக்கில் அம்பாரை மாவட்டத்தினை மையப்படுத்தி இளைஞர் ஊடகப் பேரவை Youth Media Forum (YMF) எனும் பெயரில் ஊடகம் மற்றும் இளம் ஊடக செயற்பாட்டாளர்களுக்கான அமைப்பு உதயமாகியுள்ளது.

  • வடக்கு முஸ்லிம்களின் எதிர்பார்ப்பு மீள்குடியேற்றமே

    1990ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட யாழ். முஸ்லிம்களின் மீள்குடியேற்றப் பிரச்சினைக்கு திர்வு காணப்பட்டுள்ளது என்று கடந்த வாரம் ஊடகங்களிலும், சமூக வளைத்தளங்களிலும் செய்திகள் வெளிவந்துள்ளமையை நீங்களும் அவதானித்திருப்பீர்கள்.

  • அதிபருக்கான பிரியாவிடை வைபவமும், சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும்

    திருகோணமலை: திருகோணமலை மாவட்டத்தின் சாஹிரா கல்லூரியின் அதிபர் முஹமது அலி அவர்களின் பிரியாவிடை வைபவமும் க.பொ.த உயர்தர கணித, விஞ்ஞன, வர்த்தகம் மற்றும் கலை பிரிவில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் 30.04.2016ஆந்திகதி சனிக்கிழமை மாலை 04.00 மணிக்கு பாடசாலை திறந்தவெளி அரங்கில் இடம்பெற்றது.

  • சமஷ்டியை வென்றெடுக்கும் இராஜதந்திரம்

    தமிழர்களின் நீண்ட காலப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அவர்களுக்கு அரசியல் தீர்வு ஒன்று வழங்கும் முயற்சிக்கு இன்று தெற்கில் ஏற்பட்டிருக்கும் தடையை நீக்குவதற்கு தமிழர்கள் இனி கடுமையாகப் போராட வேண்டி வரும் என்றே தோன்றுகின்றது. தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்குவது நியாயமானது என ஒருபுறம் ஏற்றுக்கொண்டு மறுபுறம் அதை வழங்காமல் தடுப்பதற்கான கபட நாடகத்தை-இரட்டை நிலைப்பாட்டை தெற்கின் அரசியல் களத்தில் இன்று எம்மால் காணக்கூடியதாக இருக்கின்றது.

  • காத்தான்குடி வடிகான் மூடிகள் உடைந்த காணப்படுவதால் மக்கள் அசெளகரியம்

    எம்.ரி.எம். யூனுஸ் காத்தான்குடி: காத்தான்குடி நகரசபை பிரிவிற்குட்பட்ட வடிகான்களின் மூடிகள் சிதைவடைந்த நிலையில் நீண்ட நாட்களாக திருத்தம் செய்யப்படாமல் காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். காத்தான்குடி கடற்கரை வீதி, மீன்பிடி இலாகா வீதி, டெலிகொம் வீதிகளினதும் இன்னும் பல வீதிகளிலும் வடிகான் மூடிகள் உடைந்து மக்கள் பாவனைக்கு பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது.

  • NFGG நடாத்திய தொழிலாளர் தின நிகழ்வு

    NFGG ஊடகப் பிரிவு காத்தான்குடி: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG )யின் மேதின நிகழ்வு நேற்று (01.05.2016) காத்தான்குடியில் நடைபெற்றது. ‘உழைப்பாளிகளைக் கௌரவிப்போம்’ என்ற மகுடத்தில் ஏற்பாடு செய்ப்பட்டிருந்த இந்த தொழிலானர் தின நிகழ்வு, காத்தான்குடியில் அமைந்துள்ள NFGG யின் கிழக்குப் பிராந்திய தலைமைக் காரியாலயத்தில் இரவு 08.00 மணி முதல் 10.30 மணிவரை நடை பெற்றது.

  • மனித உள்ளங்களில் இடம்பிடித்துவரும் சிப்லியின் உன்னத சேவைகளில் இதுவும் ஒன்று

    பூநொச்சிமுனை: பூநொச்சிமுனை எல்லை கிராமத்தில் அமைந்திருக்கும் மட்/மம/இக்றா வித்தியாலயத்தில் மாணவர்கள் கடந்த 2015ஆம் ஆண்டில் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலை வரலாற்றில் சிறந்ததோர் சாதனையினை நிலைநாட்டினர். அம்மாணவர்களை சந்திப்பதற்கும் பாடசாலையின் நிலைமைகளையும் அறிவதற்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் 28.03.2016ஆந்திகதி விசேட விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

  • பேசும் படம்

←Previous Page
1 … 221 222 223 224 225 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar