Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • கத்தாரில் வெற்றிகரமாய் நடைபெற்று முடிந்த ‘மூசாப்பும் ஒரு முழ வெயிலும்’ கவிதை நூல் அறிமுகமும் மற்றும் நண்பர்கள் ஒன்று கூடலும்

    டோஹா: இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஒலிபரப்பாளரும்,கவிஞருமான எஸ்.ஜனூஸ் எழுதிய ‘மூசாப்பும் ஒரு முழ வெயிலும்’ கவிதை நூல் அறிமுக விழா மற்றும் இலங்கை நண்பர்கள் ஒன்றுகூடல் என்பன ECM PVT (ltd) ஏற்பாட்டில் நேற்றைய தினம் மாலை (05.05.2016) டோஹாவில் அமைந்துள்ள இலங்கை சர்வதேசப் பாடசாலையின் கேட்போர்கூடத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

  • அவுஸ்திரேலியாவிலிருந்து திருப்பியனுப்பப்பட்டவர்களிடம் விசாரணை

    கொழும்பு: அவுதிரேலியாவிலிருந்து இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ள இலங்கையர்கள் 12 பேரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். விசேட விமானம் ஒன்றின் மூலம் இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட இவர்களில் பெண் ஒருவரும், சிறார்கள் இருவரும் உள்ளனர். நீர்கொழும்பிலிருந்து சட்டவிரோமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த நிலையில், அவுஸ்திரேலியாவின் கோகோஸ் தீவில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டதாக இலங்கை குடிவரவு-குடியகல்வு திணைக்களம் கூறுகின்றது.

  • அலெப்போ எரிகிறது

    அலெப்போ: சிரியாவின் போர்நிறுத்த ஒப்பந்தம் நிலுவையில் உள்ள அலெப்போ நகருக்கு அருகில் ஒருபெரும் சண்டை நடைபெற்றுவருவதாக செய்திகள் கூறுகின்றன. எழுபதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள கேந்திர முக்கியத்துவம் மிக்க ஒரு கிராமத்தை கிளர்ச்சி படையினர் கைப்பற்றியுள்ளதாக பிரிட்டனை தளமாக கொண்ட சிரியாவின் மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

  • சபாநாயகரின் தீர்ப்பை ஏற்க முடியாது:-மஹிந்த அணி

    கொழும்பு: பாராளுமன்றத்தினுள் இடம்பெற்ற கைகலப்பு தொடர்பான சபாநாயகரின் தீர்ப்பை ஏற்க முடியாது என மஹிந்த ஆதரவு அணியினர் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தனர். நிலையியற் கட்டளைக்கு முரணாகவே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணை பக்கச்சார்பானது எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

  • சிறுமிக்கு சூடு – சந்தேக நபர்களுக்கு மீண்டும் 14 நாள் விளக்கமறியல் நீடிப்பு

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடியில் 10 வயது சிறுமிக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களான சிறுமியின் வளர்ப்புத்தாய் மற்றும் சிறுமியின் தந்தை ஆகிய இருவருக்கும் (மே) 20ம் திகதி வரை மீண்டும் 14 நாள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா இன்று 06 வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

  • 16வயதில் விமானத்தை செலுத்துவதற்கான பயிற்சியில் காத்தான்குடியை சேர்ந்த மாணவி றீமா பாயிஸ்

    லண்டன்: புதிய காத்தான்குடியை சேர்ந்த லண்டனை வசிப்பிடமாக கொன்ட றீமாபாயிஸ் (16) இலங்கையின் முதல் “முதல் முஸ்லிம் பெண் விமானியாகும்” முயற்சியில் முதல்கட்டமாக லண்டனில் பிரசித்திபெற்ற (சையில் போர்ன் கிளைடிங் கிளப்)ல் இனைந்து ஒருவருட பயிற்சியை ஆரம்பித்துள்ளார்.

  • ஃபஜ்ர் தொழுகை

  • பாரிய ஆபத்தில் இருந்து தப்பியது அரசாங்கம்!!

    கொழும்பு: நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற 5 கோடியே 50 இலட்சம் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணைக்கான வாக்கெடுப்பில் அரசாங்கம் தப்பியது. பிரேரணைக்கு ஆதரவாக 33 வாக்குகளும் எதிராக 31 வாக்குகளும் கிடைத்தன. பிரேரணை தோற்கடிக்க பட்டிருக்கமாக இருந்தால் தேசிய அரசிற்கு பாரிய பின்னடைவாக இருந்திருக்கும் என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

  • மக்காவுக்கு அருகே தீவிரவாத வலையமைப்பு தகர்க்கப்பட்டது

    மக்கா: புனித மக்கா நகருக்கு அருகே தளமமைத்து செயல்பட்டுவந்த தீவிரவாத அமைப்பு ஒன்றை தமது பாதுகாப்புப் படையினர் தகர்த்துள்ளதாக சவுதி அரேபியா கூறியுள்ளது.பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் அந்தத் தீவிரவாத வலையமைப்பின் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.

  • சாய்ந்தமருதில் பகற்கொள்ளை! விரைந்து செயற்படுமா கல்முனை பொலிஸ்? அரச உத்தியோகத்தர்கள் பீதி!!

    ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேச அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் இன்று காலை பெறுமதியான தங்க நகைகளும் ரொக்கப் பணமும் கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதானது,

  • அக்கரைப்பற்றில் நாளை தேசிய இஸ்லாமிய எழுச்சி மாநாடு

    சாய்ந்தமருது எம்.எஸ்.எம்.சாஹிர் அக்கரைப்பற்று: இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டல் மையத்தின் ஏற்பாட்டில், தேசிய இஸ்லாமிய எழுச்சி மாநாடு நாளை (07) காலை 9.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை அக்கரைப்பற்று பாலத்தடி மரச்சோலை என்னும் இடத்தில் இடம்பெறவுள்ளது. ‘சுவனம் நோக்கிய பயணம்’ என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம் மாநாட்டில், பிரபல உலமாக்களான அப்துல் ஹமீத் ஷரயி, முர்ஸித் அப்பாஸி, ஜாபிர் ஸரபி, நியாஸ் ஸிராஜி, அன்ஸார் தப்லீகி, அப்துல் கனி ஹாமி, சாபித் ஷரயி,…

  • சர்வதேசப் பாடசாலைகளுக்கான மதிப்பீட்டுப் பரீட்சையில் காத்தான்குடி மாணவன் சாதனை

    எம்.ரி.எம். யூனுஸ் காத்தான்குடி: காத்தான்குடியில் இயங்கிவரும் Unique சர்வதேச பாடசாலையில் கல்வி கற்கும் முனாஸ் றுஸ்தா தம்பதிகளின் புதல்வன் எம்.எம்.முப்தி அஹமட் சர்வதேச பாடசாலைகளுக்கிடையிலான மதிப்பீட்டுப் பரீட்சையில் ஆசிய கண்டத்தில் முதலாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

←Previous Page
1 … 219 220 221 222 223 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar