மனித உள்ளங்களில் இடம்பிடித்துவரும் சிப்லியின் உன்னத சேவைகளில் இதுவும் ஒன்று

shiblyபூநொச்சிமுனை: பூநொச்சிமுனை எல்லை கிராமத்தில் அமைந்திருக்கும் மட்/மம/இக்றா வித்தியாலயத்தில் மாணவர்கள் கடந்த 2015ஆம் ஆண்டில் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலை வரலாற்றில் சிறந்ததோர் சாதனையினை நிலைநாட்டினர். அம்மாணவர்களை சந்திப்பதற்கும் பாடசாலையின் நிலைமைகளையும் அறிவதற்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் 28.03.2016ஆந்திகதி விசேட விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

அதன்போது, பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களையும் சந்தித்து பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையடினார்.

இதன்போது விஞ்ஞான துறையில் கல்வி கற்கும் மூன்று மாணவர்களின் கல்வி செலவுகளுக்காக மாதாந்தம் 1000.00 ரூபா வீதமும் மற்ற துறைகளில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களின் கல்வி செலவுகளுக்காக மாதாந்தம் 500.00 ரூபா வீதமும் தனது சொந்த நிதியிலிருந்து ஒரு வருடத்திற்கு வழங்குவதாக வாக்குறுதியளித்தார்.

இதற்கமைவாக அன்மையில் மட்/மம/இக்றா வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கா.பொ.த சாதாரண தரம் சித்தியடைந்து உயர்தரத்திற்கு தெரிவான மாணவர்கள் மற்றும் சிறந்த பெறுபேறுகளை பெறுவதற்கு உறுதுணையாக அமைந்த ஆசிரியர்களுக்குமான கௌரவிப்பு நிகழ்வுவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் தாம் வழங்கிய வாக்குறுதிக்கமைவாக முதற்கட்டமாக க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைக்கான மூன்று மாத உதவித் தொகையை வழங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வில் ஆசிரியர்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதற்கான செலவீனத்தையும் மாகாண சபை உறுப்பினர் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வின் போது உரையாற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்

இப்பாடசாலைக்கு வருமாறு என்னை யாரும் அழைக்காத நிலையில் இம்மாணவர்களினுடைய பெறுபேறு நானாகவே இங்கு வந்து இந்த மாணவர்களுக்கு ஏதாவது உதவ வேண்டும் என்ற ஒரு உணர்வு எனக்குள் ஏற்பட ஒரு காரணமாக அமைந்தது. நகர்புற பாடசாலைகளில் கல்வி கற்கின்ற மாணவர்களோடு ஒப்பிடுகையில் இவ்வாறான எல்லைப்புற கிராமங்களிலுள்ள பாடசாலை மாணவர்கள் குறைவான வளங்களையே கொண்டுள்ளார்கள். நகர்புற பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் பெறும் சித்திகள் மிகவும் சாதாரணம் ஏனெனில் அங்கு போதியளவு ஆசிரியர் வளம், பௌதீக வளம் மற்றும் பிரத்தியோக வகுப்புகளில் கல்வி கற்பதற்குரிய வசதி வாய்ப்புக்கள் உள்ளது. இவ்வாறான பல வசதிவாய்ப்புகள் இருக்கின்ற பாடசாலைகளில் மாணவர்கள் பெரும் சித்திகள் 9A, 8A, 6A, பாராட்டத்தக்க விடயமாகும்.

இருந்த போதிலும் அதைவிட அதிகமாக இவ்வாறான எல்லைப்புற பௌதீக ஆளணி வளங்களை மிகக்குறைவாக வளமற்ற பிரதேசங்களில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் மிக அதிகமாக பாராட்டப்பட வேண்டும். இவ்வாறன மாணவர்களின் கல்வித் தேவைகளுக்கு உதவி செய்து அவர்களை மேலும் ஊக்கப்படுத்த வேண்டியது எமது கடமையாகும். இதனூடாக இம்மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்று இப்பாடசாலைக்கும், பெற்றோர்களுக்கும் மற்றும் இப்பிரதேசத்திற்கும் நற்பெயரை பெற்றுகொடுக்க வேண்டுமென்பது எனது அவாவாகும்.

shibly

மேலும் விஞ்ஞானத்துறையில் கல்வி பயிலும் மாணவர்கள் மிகவும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அவர்கள் அதிகமாக பிரத்தியேக வகுப்புகளுக்கு செல்லவேண்டிய தேவை ஏற்படும் மேலும் அதிக தூர இடங்களுக்கும் செல்ல நேரிடும். எனவே அவர்களுக்கான ஊக்குவிப்புத் தொகையாக மாதமொன்றிற்கு 1000 ரூபாயினையும் ஏனைய பிரிவுகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு 500 ரூபாயுமாக ஒட்டு மொத்தமாக இப்பாடசாலையிலிருந்து உயர்தரம் கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் இத்தொகையை கொடுப்பதற்கு நாங்கள் விரும்பினோம்.

அதில் நாம் எவ்வித பாகுபாடும் காட்டவில்லை. நல்ல பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்குவது ஏனையவர்களுக்கு வழங்காமல் விடுவது என்ற முறைமை இந்த பாடசாலையை பொறுத்தவரை பொருந்தாது. இவ்வாறான பௌதீக வளம் குறைந்த பாடசாலைகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு மாத்திரம் புலமைப்பரிசில் என்ற முறை ஏனைய மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். ஆகவே நாம் இந்த புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தில் அனைத்து மாணவர்களையும் உள்வாங்கியிருக்கின்றோம்.

இப்பாடசாலையில் பல தேவைப்பாடுகள் இருப்பதாகவும் அவற்றை விரைவில் நிவர்த்தி செய்து தருமாறும் இப்பாடசாலையின் அதிபர் அவர்கள் எம்மிடம் சுட்டிக்காட்டினார். எனவே அத்தகைய தேவைகளை உடனடியாக இனங்கண்டு அதற்கு என்னென்ன முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ அந்த அளவு முக்கியத்துவம் கொடுத்து இப்பாடசாலையின் தேவைகளை பூர்த்தி செய்து விரைவில் இப்பாடசாலைய சிறந்த பௌதீக வளம்மிக்க பாடசாலையாக மாற்ற முயற்சிப்போம். கல்விக்கான உதவிகளை செய்வதற்கு நாம் எப்போதும் பின்னிற்பது கிடையாது.

அதே போன்று மாணவர்களாகிய நீங்களும் மிகவும் அக்கறையோடு கல்வி கற்று உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்று பல்கலைக்கழகம் சென்று இந்த பிரதேசத்திற்கு பெருமை சேர்க்கவேண்டும் அதேநேரம் மார்க்க விடயத்தினை விடாமல் தொடர்ச்சியாக பின்பற்றி அதனுடன் சேர்த்து தமது கல்வியினை தியாகத்துடன் தொடரவேண்டும். அத்துடன் இங்கே இருக்கக்கூடிய பெற்றோர்களாகிய நீங்களும் மார்க்க விடயத்தினை விடாமல் தொடர்ச்சியாக பின்பற்றி தமது பிள்ளைகள் சிறந்த நிலைமைக்கு வருவதற்காக அர்பணிப்போடும் தியாகத்துடனும் செயற்பட வேண்டும் என தனதுரையில் கேட்டுக்கொண்டார்.

M.T. ஹைதர் அலி
செய்தியாளர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s