சிகரத்தில் சிறுமி (07) துஷ்பிரயோகம் 15 வயது சிறுவன் கைது

child-abuse2[1]காத்தான்குடி: 7 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 15 வயதுடைய சிறுவன் நேற்று (02) மாலை காத்தான்குடி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி பிரதேசத்தின் சிகரம் கிராமத்தில், தரம் இரண்டில் கல்வி கற்கும் 7 வயதுடைய சிறுமியொருவர் காத்தான்குடியைச் சேர்ந்த சிறுவன் ஒருவனினால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியின் மாமா முறையான சிறுவனினாலே, இந்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில், இருந்து தெரியவந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சிறுவன் அந்த சிறுமியின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்ததாகவும், இந்நிலையில் இச் சிறுமி நேற்று (02) காலையில் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து விசாரணைகளை மேற் கொண்டுள்ள காத்தான்குடி பொலிசார் சிறுவனை கைது செய்துள்ளதுடன் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமியின் வீட்டுக்குச் சென்ற பொலிஸ் சொகோ பிரிவின் மாவட்ட பொறுப்பதிகாரி கே. ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

ஜவ்பர்கான்

Published by

Leave a comment