NFGG நடாத்திய தொழிலாளர் தின நிகழ்வு

  • NFGG ஊடகப் பிரிவு

nfggகாத்தான்குடி: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG )யின் மேதின நிகழ்வு நேற்று (01.05.2016) காத்தான்குடியில் நடைபெற்றது. ‘உழைப்பாளிகளைக் கௌரவிப்போம்’ என்ற மகுடத்தில் ஏற்பாடு செய்ப்பட்டிருந்த இந்த தொழிலானர் தின நிகழ்வு, காத்தான்குடியில் அமைந்துள்ள NFGG யின் கிழக்குப் பிராந்திய தலைமைக் காரியாலயத்தில் இரவு 08.00 மணி முதல் 10.30 மணிவரை நடை பெற்றது.

இராப்போசன உபசாரத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விசேட மேதின நிகழ்வில் பல தொழில்துறைகளையும் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட முஸ்லிம், தமிழ் தொளிலாளர்கள் கலந்து கொண்டனர்.

NFGG யின் மட்டக்களப்பு பிராந்திய சபையின் சிரேஸ்ட உறுப்பினரான SMM பஸீர் ஆசிரியரின் தலைமையில் நடை பெற்ற இந்த நிகழ்வில் NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், அதன் பொதுச் செயலாளர் நஜா முஹம்மட், NFGGயின் தலைமைத்துவ சபை உறுப்பினர்களான Dr.ILM றிபாஸ், பொறியியலாளர் பழ்லுல் ஹக், MACM ஜவாஹிர் ஆகியோரும், முன்னாள் நகரசபை உறுப்பினர்களான AGM ஹாறூன் , SHM பிர்தௌஸ் ஆசிரியர், MAHM மிஹ்ழார் மற்றும் MHA நசீர் ஆகியோரும், ஏனைய சிரேஸ்ட உறுப்பினர்களான MACMமுஹ்ஸின், MM அமீர்அலி ஆசிரியர், MAM பைசர் , ASM ஹில்மி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

nfgg

அத்தோடு ஐக்கிய தேசிய கட்சியின் காத்தான்குடிப் பிரதேச கொத்தணி அமைப்பாளர் HMM முஸ்தபா உட்பட பிரதேச உலமாக்கள், பிரமுகர்கள் உட்பட NFGGயினர் செயற்குழு உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் ‘மே தினமும் அது நிறைவேண்டிய வேண்டிய நோக்கங்களும்’ என்ற தலைப்பில் நஜா முஹம்மட் அவர்களும், பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களும் விசேட உரைகளை ஆற்றினர்.

அத்தோடு பல்வேறு தொழில் துறைகளைச் சார்ந்த தொழிலாளிகள் பலரும் தமது பிரச்சினைகளை முன்வைப்பதற்கான சந்தர்ப்பமும் இந்நிகழ்வின் போது வழங்கப்பட்டமையானது விசேட அம்சமாகும்.

Published by

Leave a comment