கொழும்பு: அவுதிரேலியாவிலிருந்து இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ள இலங்கையர்கள் 12 பேரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். விசேட விமானம் ஒன்றின் மூலம் இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட இவர்களில் பெண் ஒருவரும், சிறார்கள் இருவரும் உள்ளனர். நீர்கொழும்பிலிருந்து சட்டவிரோமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த நிலையில், அவுஸ்திரேலியாவின் கோகோஸ் தீவில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டதாக இலங்கை குடிவரவு-குடியகல்வு திணைக்களம் கூறுகின்றது.
நாடு கடத்தப்பட்டவர்களிடம் விமான நிலைய காவல்துறையினர் வாக்குமூலம் பதிவுசெய்து மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
Published by


Leave a comment