அலெப்போ எரிகிறது

syriyaஅலெப்போ: சிரியாவின் போர்நிறுத்த ஒப்பந்தம் நிலுவையில் உள்ள அலெப்போ நகருக்கு அருகில் ஒருபெரும் சண்டை நடைபெற்றுவருவதாக செய்திகள் கூறுகின்றன. எழுபதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள கேந்திர முக்கியத்துவம் மிக்க ஒரு கிராமத்தை கிளர்ச்சி படையினர் கைப்பற்றியுள்ளதாக பிரிட்டனை தளமாக கொண்ட சிரியாவின் மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

சிரியா அகதிகள் முகாம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் குறைந்தது முப்பது பேர் கொல்லப்பட்ட சம்பவம் போர் குற்றமாக ஏற்றுக்கொள்ளப்படலாம் என்று ஐநாவின் மனிதநேய அமைப்பின் தலைவர் ஸ்டீஃப்ன் ஓ ப்ரையன் தெரிவித்துள்ளார்.

syriya

சமீப வாரங்களாக கிளர்ச்சிக்காரர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வரும் சிரியா அரசாங்கந்தான் வியாழனன்று துருக்கியின் எல்லைக்கு அருகே நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் பொறுப்பு என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

Published by

Leave a comment