WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • எஸ் எல் யூத் அமைப்பிற்கும் NTJயிற்கும் இடையிலான விவாத ஒப்பந்தம்

    காத்தான்குடியில் இயங்கக் கூடிய எஸ் எல் யூத் எனும் அமைப்பிற்கும் எமக்கும் இன்று காலை (16.06.2016) விவாத ஒப்பந்தம் கைச்சாத்தானது. எது சுன்னா? என்பது விவாத தலைப்பாக அங்கு தீர்மானிக்கப்பட்டது. எஸ் எல் யூத் அமைப்பு சார்பில் மௌலவி M நுஸ்ரான் (பின்னூரி) மற்றும் காத்தான்குடி ரஷாதிகளும் கலந்து கொண்டனர் .

  • அலவி மௌலானா காலமானார்

    முன்னாள் மேல் மாகாண ஆளுனரும், பாராளுமன்ற உறுப்பினருமான அலவி மௌலானா தனது 84 ஆவது வயதில் இன்று காலமானார். 1948 ஆம் ஆண்டு தொழிற்சங்கவாதியாக அரசியலில் பிரவேசித்த இவர் 1956 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து சுமார் 50 வருடங்களுக்கு மேலாக தனது அரசியல் சேவையை முன்னெடுத்திருந்தfதோடு 2015 ஆம் ஆண்டு தனது அரசியல் வாழ்க்கையை நிறைவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  • தண்ணீர் பிரச்சினைக்கு ஹிஸ்புல்லாஹ்வினால் தீர்வு

    அநுராதபுரம்: அநுராதபுர மாவட்டத்தில் சிறுநீரக நோய் அதிக தாக்கம் செலுத்தியுள்ள 5 கிராமங்களுக்குத் தேவையான நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை (water filter 2000 l) ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் முதல் கட்டமாக வழங்கியுள்ளது. அநுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் விடுத்தி விசேட வேண்டுகோளுக்கு அமைய ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் 1750000 இலட்சம் ரூபா செலவில் இந்த நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

  • கொழும்பு துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த கப்பலில் தீ

    கொழும்பு: இதுவரை காலமும் மிகவும் பாதுகாப்பாக பேணப்பட்டு வந்த ஆயுத களஞ்சியம் அவ்வளவு இலகுவில் வெடித்து சிதற எந்தவிதமான வாய்ப்பும் இல்லை. இது எவ்வாறு நிகழ்ந்தது என்பது தொடர்வில் இராணுவம் குழம்பியுள்ள நிலையில், இன்று மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டுள்ளது.

  • ஜே.வி.பி முன்னாள் தலைவர் சோமவங்ச காலமானார்

    கொழும்பு: ஜே.வி.பியின் முன்னாள் தலைவர் சோமவங்ச அமரசிங்க இன்று (15) காலை காலமானார்.இறக்கும்போது அவருக்கு வயது 74 ஆகும். மக்கள் விடுதலை முன்னணியின் நான்காவது தலைவராக செயற்பட்ட அவர், கடந்த 1990 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2014 பெப்ரவரி வரை அக்கட்சிக்கு தலைமைத்துவம் வழங்கியிருந்தார்.

  • டொனால்ட் டிரம்ப் போட்டியிடும் கட்சியின் கணினி வலையமைப்பு ரஷ்யாவால் ஊடுறுவப்பட்டது!

    நியுயோர்க்: ரஷிய அரசைச் சார்ந்த, கணினி அமைப்பை சட்டவிரோதமாக உடைப்பவர்கள், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் பற்றிய தகவல்களை ஆராய தங்களின் கணினி அமைப்பை சட்டவிரோதமாக ஊடுருவி உள்ளனர் என ஜனநாயகக் கட்சியை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மின்னஞ்சல் மற்றும் இணையத்தில் நடந்த உரையாடல்கள் திருப்பட்டுள்ளதாகவும், ஆனால் தனிநபர் மற்றும் நிதி சார்ந்த தகவல்கள் திருடப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • அழுத்கமை கலவரம்: அமீர் தாக்கப்பட்டதற்கு காவல்துறை மன்னிப்புக் கோரியது

    அளுத்கமை: பொது பல சேனா அமைப்பின் தலையீட்டுடன் முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறைகள் மேற்கொள்ளப்பட்ட போது தன்னை அளுத்கமை பகுதியில் அமைந்துள்ள புத்த விகாரையொன்றுக்கு கொண்டு சென்று கடுமையாக தாக்கியதாக மனுவை சமர்ப்பித்த முகமட் அமீர் எனும் நபர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் கடுமையாக தாக்கப்பட்ட தன்னை பொலீசாரிடம் ஒப்படைத்தாக கூறிய மனுதாரர் பொலீசார் தனக்கு எதிராக பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி போதைபொருள் வைத்திருந்தமை தொடர்பாக களுத்துறை தீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்ததாக அறிவித்தார்.

  • அதிகமாக இரத்ததானம் வழங்கியதில் அகில இலங்கை ரீதியாக மூன்றாவது தடவையாகவும் SLTJ முதலிடம்

    –முஹம்மது நியாஸ் “உதிரம் கொடுப்போம், உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் மனிதநேயம் பேணுகின்ற இரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தினை ஒழுங்குசெய்து அதன் மூலம் நாடளாவிய ரீதியில் மிகவும் கணிசமான அளவு உதிரத்தை வாரி வழங்கிய அமைப்புக்களின் வரிசையில் இவ்வருடமும் (2016) ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் தேசிய மட்டத்தில் முதலிடத்தை சுவீகரித்துள்ளது.

  • நபி மொழிகளை அறிவிக்கும் தூய பணியில் இலங்கையைச் சேர்ந்த அறிவிப்பாளர்களும் இருந்துள்ளனரா?

    ஹிஜ்ரி 430ல் மரணித்த இமாம் அபூ நுஐம் அல் அஸ்பஹானீ (ரஹ்) அவர்கள் எழுதிய “அஹ்பாரு அஸ்பஹான்” எனும் நூலில் பாங்கு சொல்லும் முஅத்தின், கூலியை எதிர்பார்க்காமல் பாங்கு சொல்வதின் சிறப்புக் குறித்து நபி (ஸல்) அவர்களின் ஒரு ஹதீஸைப் பதிவு செய்கிறார்கள். அந்த ஹதீஸை அறிவிக்கும் ஒன்பது அறிவிப்பாளர்களில் “அபுல் காஸிம் முஹம்மத் பின் ஜஃபர் அஸ்ஸரந்தீபி” என்பவரும் ஒருவராவார்.

  • ஸடேர்லிங் பவுண்ட் வீழ்ச்சியடைகிறது

    லண்டன்: இந்த மாதத்தின் இறுதியில் நடைபெறவுள்ள மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறலாம் என்ற நிஜ சாத்தியக்கூறுகளை நிதி சந்தைகள் கருத்தில் கொண்டுள்ளதால், பிரிட்டனின் நாணயமான பவுண்ட், அமெரிக்க டொலர் மற்றும் ஜப்பானிய யென்னுக்கு எதிராக வீழ்ச்சி அடைந்துள்ளது.

  • கிழக்குமாகான கராத்தே சுற்றுப்போட்டி

    ஒலுவில்: ஸ்ரீ லங்கா சோட்டோகான் கராத்தே சம்மேளனத்தின் கிழக்குமாகான கராத்தே சுற்றுப்போட்டி நேற்று 12. 06. 2016 இல் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உள்ளக அரங்கில் நடைபெற்றது. இச்சுற்று போட்டிக்கு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் அவர்களும், கௌரவ அதீதியாக மாணவ நலன் பிரிவு பணிப்பாளர் கலாநிதி ரமீஸ் அபூபக்கர் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்து வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதள்களும், பதக்கங்களும் வழங்கி வைத்தார்கள்.

  • 50 பேரை சுட்ட மதீன் யார்?

    # மனநிலை சரியில்லாதவர் – முன்னாள் மனைவி ஒப்புதல் # 29 வயதான உமர் மதீன், ஆப்கான் பெற்றோருக்கு, புளோரிடாவில் பிறந்த அமெரிக்கவாசி. # 2013 மற்றும் 2014 இல் FBI இனால் விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர் # தாக்குதலுக்கு முன்னர் அவசர தொலைபேசிக்கு (911) அழைத்து தீவிரவாத தொடர்பு உள்ளவர் என தெரிவித்துள்ளார். # பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

←Previous Page
1 … 200 201 202 203 204 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar