தண்ணீர் பிரச்சினைக்கு ஹிஸ்புல்லாஹ்வினால் தீர்வு

hizbullahஅநுராதபுரம்: அநுராதபுர மாவட்டத்தில் சிறுநீரக நோய் அதிக தாக்கம் செலுத்தியுள்ள 5 கிராமங்களுக்குத் தேவையான நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை (water filter 2000 l) ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் முதல் கட்டமாக வழங்கியுள்ளது. அநுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் விடுத்தி விசேட வேண்டுகோளுக்கு அமைய ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் 1750000 இலட்சம் ரூபா செலவில் இந்த நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

சிறுநீரக நோயினால் அதிகம் பாதிக்கப்பட்ட அநுராதபுர மாவட்டத்தன் அசரிகம, அலுத்கம,கோலிபந்தாவ, கொட்டியாவ, கல்லூர் ஆகிய ஐந்து கிராமங்களுக்கும் முதல் கட்டமாக இந்த வசதி செய்துகொடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் இந்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் பொருத்தப்பட்டு கிராமம் முழுவதும் சுத்தமான நீர் விநியோகிக்கப்படவுள்ளது.

இந்த இயந்திரங்கள் ஏற்கனவே குறித்த பிரதேசங்களில் பொருத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இயந்திரத்தை இஷாக் எம்.பியிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சில் நடைபெற்ற இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மட்டக்களப்பு கெம்பஸ் நிறைவேற்று அதிகாரி பொறியியலாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ், இராஜாங்க அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் ரயீஸ{ட்டீன், இணைப்புச் செயலாளர் றுஸ்வின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

hizbullah

இதன் போது கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்,

“இஷாக் எம்.பியின் வேண்டுகோளுக்கு அமைய ஸ்ரீலங்கா ஹிரா பௌண்N;டஷன் இந்த இயந்திரங்களை பெரும் தொகை செலவில் பெற்றுக் கொடுத்துள்ளது. எதிர்காலத்திலும் இவ்வாறான உதவிகளை வழங்க நாங்கள் எண்ணியுள்ளோம்”என்றார்

இதன் போது கருத்துத் தெரிவித்த இஷாக் எம்.பி.,

“சிறுநீரக நோயினால் இணங்கானப்பட்ட 30 ஆயிரம் பேர்களில் 20ஆயிரம் பேர் அநுராதபுர மாவட்டத்திலேயே உள்ளனர். இவற்றில் பல முஸ்லிம் கிராமங்களும் உள்ளன. அம்மக்களுக்குத் தேவையான நீர் சுத்திகரிப்பு இயந்திரத்திளைப் பெற்றுக் கொடுக்க இதுவரை யாரும் முன்வராத நிலையில், அம்மக்களது துயர் அரிந்து இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் முன்வந்து இந்த உதவியினை செய்துள்ளார். அநுராதபுர மக்கள் சார்பில் நான் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s