நபி மொழிகளை அறிவிக்கும் தூய பணியில் இலங்கையைச் சேர்ந்த அறிவிப்பாளர்களும் இருந்துள்ளனரா?

Kithabஹிஜ்ரி 430ல் மரணித்த இமாம் அபூ நுஐம் அல் அஸ்பஹானீ (ரஹ்) அவர்கள் எழுதிய “அஹ்பாரு அஸ்பஹான்” எனும் நூலில் பாங்கு சொல்லும் முஅத்தின், கூலியை எதிர்பார்க்காமல் பாங்கு சொல்வதின் சிறப்புக் குறித்து நபி (ஸல்) அவர்களின் ஒரு ஹதீஸைப் பதிவு செய்கிறார்கள். அந்த ஹதீஸை அறிவிக்கும் ஒன்பது அறிவிப்பாளர்களில் “அபுல் காஸிம் முஹம்மத் பின் ஜஃபர் அஸ்ஸரந்தீபி” என்பவரும் ஒருவராவார்.

இவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பது ஆச்சரியமான உண்மையாகும். ஸரந்தீப் எனும் பாரசீக மொழிச் சொல், இலங்கைக்கான பழைய பெயராகும். முன்னொரு காலத்தில் இலங்கையைச் சேர்ந்தவர்களை “ஸரந்தீபி” என அரேபியர்கள் அழைத்து வந்தனர். இலங்கையைச் சேந்த இந்த ஹதீஸ் அறிவிப்பாளர் குன்புல் (قنبل) எனும் கிராஅத் வழி முறைகளை அறிவிப்பதிலும் தேர்ச்சி பெற்று விளங்கியுள்ளார் என இமாம் இப்னுல் ஜவ்ஸீ (ரஹ்) அவர்கள் எழுதிய “காயதுந் நிஹாயா பீ தபகாதில் குர்ரா” எனும் நூலில் 911ம் இலக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். (குன்புல் (قنبل) எனும் கிராத் வழி முறை குறித்து இன்ஷாஅல்லாஹ் பிரிதொரு சந்தர்ப்பத்தில் விளக்குகிறேன்)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளை அறிவித்தவர்களில் இலங்கையைச் சேர்ந்தவரும் இருந்துள்ளார் என்பது ஒவ்வொரு இலங்கையருக்கும் இனிமையான செய்தியாகும். இந்த அபுல் காஸிம் முஹம்மத் பின் ஜஃபர் அஸ்ஸரந்தீபி அவர்களைப் போன்று இன்னும் சில இலங்கை முஸ்லிம்களும் ஹதீஸ்களை அறிவித்துள்ளார்கள். இன்ஷாஅல்லாஹ் அடுத்த பதிவில் அவர்களைப் பார்வையிடுவோம்.

  • மெளலவி ஸஹ்றான் ஹாஷிம் (மஸ்ஊதி)
    அழைப்பாளர், தேசிய தவ்ஹீத் ஜமாஅத் இலங்கை
  • தகவல் M ஜெஸீம்

Published by

Leave a comment