அழுத்கமை கலவரம்: அமீர் தாக்கப்பட்டதற்கு காவல்துறை மன்னிப்புக் கோரியது

Aluthgama 17.06.2014 (5)அளுத்கமை: பொது பல சேனா அமைப்பின் தலையீட்டுடன் முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறைகள் மேற்கொள்ளப்பட்ட போது தன்னை அளுத்கமை பகுதியில் அமைந்துள்ள புத்த விகாரையொன்றுக்கு கொண்டு சென்று கடுமையாக தாக்கியதாக மனுவை சமர்ப்பித்த முகமட் அமீர் எனும் நபர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் கடுமையாக தாக்கப்பட்ட தன்னை பொலீசாரிடம் ஒப்படைத்தாக கூறிய மனுதாரர் பொலீசார் தனக்கு எதிராக பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி போதைபொருள் வைத்திருந்தமை தொடர்பாக களுத்துறை தீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்ததாக அறிவித்தார்.

இதன் முலம் தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி அவர் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கை தாக்கல் செய்தார். நேற்று (14) வழக்கு எடுத்து கொள்ளப்பட்டபோது கருத்துக்களை தெரிவித்த அரச தரப்பின் வழக்கறிஞர், இந்த சம்பவம் குறித்து பாதிக்கப் பட்ட மனுதாரரிடம் மன்னிப்புக் கோர பொலீசார் தயார் என்று அறிவித்தார்.

அதன் பின்னர் திறந்த நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி முன்னர் தாக்கப்பட்ட நபரிடம் அளுத்கமை பொலீஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரியினால் மன்னிப்புக் கோரப்பட்டது. இதேவேளை மனுதாரருக்கு எதிராக களுத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள போதைபொருள் வழக்கை வாபஸ் பெறுவதாகவும் பொலீசார் அறிவித்தனர்.

Published by

Leave a comment