-
சுற்றுலா பயணிகளுக்கு பிரித்தானியா எச்சரிக்கை
லண்டன்: இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் தமது நாட்டு சுற்றுலா பயணிகளுக்கான எச்சரிக்கையை பிரித்தானிய அரசாங்கம் புதுப்பித்துள்ளது.கடந்த மாதம் புதுப்பிக்கப்பட்டுள்ள ஆலோசனைக்கமைய இலங்கையில் காணப்படுகின்ற பாலியல் தாக்குதல் ஆபத்துக்கள், ஆபத்தான குடிபானங்கள், வீதி விபத்துக்கள், டெங்கு தொற்று மற்றும் கடன் அட்டை மோசடி தொடர்பில் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
“இஸ்ரேல், இந்தியாவின் முக்கிய நண்பர்களின் ஒருவர்”- இஸ்ரேலில் நரேந்திர மோதி!
டெல் அவிவ்: இஸ்ரேலுக்கு அரசுமுறையிலான பயணம் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி. இந்தப் பயணம், இஸ்ரேலுடனான இந்தியாவின் உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தை துவங்கும் என்று நம்பப்படுகிறது. இந்தியா எப்போதுமே பலஸ்தீனத்தின் சார்பாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்தபிறகு, அரசின் கொள்கைகளில் குறிப்பிடத்தக்க மாறுதல்களை காணமுடிகிறது.
-
சவுதி பொது மன்னிப்புக் காலம் நீடிப்பு
றியாத்: சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள் அந்த நாட்டை விட்டு வெளியேற வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலம் எதிர்வரும் 23ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 21ம் திகதி முதல் ஜூன் 25ம் திகதி வரை பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டிருந்தது.
-
கத்தாருக்கு மேலும் 48 மணிநேர அவகாசம்
றியாத்: சவுதி அரேபியா மற்றும் மூன்று பிற அரபு நாடுகள், தாங்கள் விதித்த கோரிக்கைகளை நிறைவேற்ற கத்தாருக்கு மேலும் இரண்டு நாட்கள் அவகாசம் அளித்துள்ளனர். இரண்டு நாட்களுக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் கத்தார் கூடுதல் தடைகளை எதிர்கொள்ள வேண்டும். ஞாயிற்றுக்கிழமைக்குள் அல் ஜசீரா தொலைக்காட்சியை மூடுவது உள்ளிட்ட 13 கோரிக்கைகளை கத்தார் நிறைவேற்ற வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
-
இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு
கொழும்பு: 2017ம் ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் 265 இலங்கையர்கள் இஸ்ரேல் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்தவகையில், குறித்த இலங்கையர்கள் அனைவரும் விவசாயத் தொழிலின் நிமித்தமே இஸ்ரேலுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை, கடந்த ஆண்டில் விவசாய தொழிலின் நிமித்தம் 359 பேர் வரையில் இஸ்ரேல் சென்றுள்ளனர்.
-
மன்னர் சல்மானை கடவுளுக்கு நிகராக புகழ்ந்த பத்திரிக்கையாளர் இடைநீக்கம்
றியாத்: சவுதி மன்னரை அளவிற்கு அதிகமாக புகழ்ந்த காரணத்தால் பத்திரிக்கையில் கட்டுரை எழுதுபவர் ஒருவர் தனது பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.ரமலான் அல் அன்சி என்னும் கட்டுரையாளர், அல் ஜசீரா பத்திரிக்கையில் பொதுவாக கடவுளை குறிப்பதற்காக பயன்படுத்தப்படும் வார்த்தைகளை கொண்டு அரசரை பாராட்டினார். மன்னரை அளவிற்கு அதிகமாக புகழ்வது சகஜமான ஒன்றுதான் மேலும் அது எதிர்பார்க்கப்படும் ஒரு விஷயமும் கூட. ஆனால் கடவுளுடன் ஒப்பிடுவது என்பது ஒப்புக் கொள்ள முடியாத ஒன்று.
-
பெண்களுக்காக அரசியலில் கால்பதிக்கிறார் றோஹினா மஹ்ரூஃப் (காணொளி)
ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் திருகோணமலை: கடந்த சில வருடங்களாக சமூக சேவையில் ஈடுபட்டு கொண்டிருக்கின்ற பொழுது அனேகமான பெண்களை சந்திக்கின்ற வாய்ப்பு எனக்கு ஏற்பட்டிருந்தது. அந்த நேரத்திலே நான் சந்தித்த அனேகமான பெண்கள் என்னிடத்தில் முன்வைத்த முக்கிய விடயமாக ஆண் தலைமைத்துவங்கள் இருக்கின்ற இந்த உலகத்திலே நாங்கள் கூடுதலாக வாழ்ந்து வருகின்றோம். எங்களுடைய பிரச்சனைகளை முழுமையாக தீர்த்துக்கொள்ளும் பொருட்டு அரசியல் பிரதிதியாக நீங்கள் ஏன் வரக்கூடாது என்ற கேள்வியினை என்னிடம் தொடுத்தார்கள். அதுவே எனக்கு அரசியலில் குதிக்க…
-
கட்டாருக்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிவடைகிறது
டோஹா: கட்டார் மீதான தடையை நீக்குவதற்கு வளைகுடா நாடுகளால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் ஜூலை 2ம் திகதியுடன் நிறைவடைவதாக தெரிவிக்கப்படுகின்றது. 2ம் திகதிநள்ளிரவுடன் குறித்த கால அவகாசம் முடிவடைவதாக குறிப்பிடப்படுகின்றது.
-
வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கப்படும்: ட்ரம்ப்
வோஷிங்டன்: பல ஆண்டுகளாக வட கொரியா மீது தொடர்ந்து வரும் ”யுக்திபூர்வமான பொறுமையுடன் கூடிய அணுகுமுறை“ தோல்வியடைந்துவிட்டதாகவும், தீர்க்கமான பதிலடியை கொடுப்பதற்கான நேரம் வந்துவிட்டதாகவும் அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்ப் மற்றும் மூன் ஜியே-இன் `பொறுப்பற்ற மற்றும் கொடூரமான ஆட்சியினால் இரு நாடுகளும் இணைந்தே அச்சுறுத்தலை சந்தித்து வருகிறோம்` என தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன்னுடன் கலந்து கொண்ட பத்திரிகையாளர் சந்திப்பில் டிரம்ப் தெரிவித்தார்.
-
அமைச்சர் சம்பிக்கவை விமர்சித்தால் மஹிந்தவாதிகள் பதறுவது ஏன்- கிழக்கு மாகாண சபை உறுப்பினர் லாஹிர் கேள்வி
அமைச்சர் சம்பிக்க பகிரங்கமாக முன்னெடுத்துவரும் இனவாதத்துக்கு ஆதரவான கருத்துக்களுக்கு எதிராக கிழக்கு முதல்வர் குரல் கொடுத்த போது அவரை ஆட்சி துறக்க வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித்தலைவர் உதுமாலெப்பை கூறுவது வேடிக்கையாக உள்ளது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் லாஹிர் தெரிவித்தார்,
-
பித்னாக்கள் நிறைந்த ஒரு கால கட்டத்தில் சத்தியத்திற்கு தஜ்ஜாலும் உரிமை கோரலாம்
மத்திய கிழக்கில், ஆசியாவில், ஆபிரிக்காவில் இடம் பெறும் யுத்தங்கள் அழிவுகள் யாவும் பெற்றோல் மற்றும் இயற்கை எரிவாயு, கணியவளங்கள் வர்தகம் தொடர்பானவை. பின்புலத்தில் பிராந்திய மற்றும் சர்வதேச மேலாதிக்க நவகாலனித்துவ மற்றும் ஆக்கிரமிப்பு சக்திகள் அணி சேர்ந்திருக்கின்றன. மூன்றாம் உலகப் பேரழிவு முஸ்லிம் உலகில் திணிக்கப்பட்டுள்ளது என்றே கூறலாம்.
-
பாகிஸ்தான் செல்கிறது இலங்கை கிரிக்கெட் அணி
கொழும்பு: பாகிஸ்தானில் நடக்கும் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை அணி இந்த ஆண்டு இறுதியில் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி கடைசியாக கடந்த 2009ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு போட்டிகளில் விளையாடியது.