பெண்களுக்காக அரசியலில் கால்பதிக்கிறார் றோஹினா மஹ்ரூஃப் (காணொளி)

  • ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

rohina mahroofதிருகோணமலை: கடந்த சில வருடங்களாக சமூக சேவையில் ஈடுபட்டு கொண்டிருக்கின்ற பொழுது அனேகமான பெண்களை சந்திக்கின்ற வாய்ப்பு எனக்கு ஏற்பட்டிருந்தது. அந்த நேரத்திலே நான் சந்தித்த அனேகமான பெண்கள் என்னிடத்தில் முன்வைத்த முக்கிய விடயமாக ஆண் தலைமைத்துவங்கள் இருக்கின்ற இந்த உலகத்திலே நாங்கள் கூடுதலாக வாழ்ந்து வருகின்றோம். எங்களுடைய பிரச்சனைகளை முழுமையாக தீர்த்துக்கொள்ளும் பொருட்டு அரசியல் பிரதிதியாக நீங்கள் ஏன் வரக்கூடாது என்ற கேள்வியினை என்னிடம் தொடுத்தார்கள். அதுவே எனக்கு அரசியலில் குதிக்க வேண்டும் என்ற தோற்றப்பட்டினை என்னுல் உருவாக்கியது.

மேலும் எனது தந்தையானவர் மூவின மக்களுடனும் சரி சமமாக தனது அரசியல் நடவடிக்கைகளை பகிர்ந்து கொண்டவர். அவருடைய மகள் என்ற வகையில் மக்கள் என்னை அவர்களுடன் கூடவே பிறந்த சகோதரி என்ற வகையிலே என்னை பார்க்கின்றனர். எனவே முஸ்லிம் பெண்கள் மட்டுமல்லாது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ், சிங்கள சகோதர பெண்களும் குறித்த கேள்வியினையும், வேண்டுகோளினையும் என்னிடம் முன் வைத்தவர்களாக இருக்கின்றனர்.

அது தவிர ஆண்களிடம் சென்று முறையிட முடியாத விடயங்கள், சம்பவங்கள் போன்றவைகளை அரசியல் ரீதியான பெண் தலைமைத்தும் ஒன்று இருக்கின்ற நிலையில் பெண்கள் எந்த கூச்ச சுபாவமும் அற்ற நிலையிலே தங்களுடைய பிரச்சனைகளை முன்வைத்து இலகுவான முறையில் அதற்கான தீர்வினை பெற்றுகொள்ள முயற்ச்சிப்பார்கள். இவ்வாறு பல பெண்கள் சம்பந்தப்பட்ட அதிலும் முக்கியமாக பாலியல் அத்துமீறல்கள், சிறுவர் துஸ்பிரயோகம் போன்ற பிரச்சனைகளுக்கான தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு நான் ஒரு ஊடகமாக இருக்க வேண்டும் என்பதனை மிகவும் மகிழ்ச்சியுடன் கையில் எடுத்து செயற்படுத்துவதனை முக்கிய நோக்கமாக கொண்டே அரசியலில் குதிக்க நினைத்துள்ளேன். என்ற பதிலினை முஸ்லிம் பெண்ணாக இருக்கின்ற நீங்கள் எதற்காக அரசியல் குதிக்க இருக்கின்றீர்கள் என்ற கேள்விக்கே முன்னாள் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமாக இருந்த அஸ்ஸஹீத் ஈ.எம்.மஹ்ரூஃபின் புதல்வியும், தற்போதைய திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் இளம் பாராளுமன்ற உறுப்பினரான இம்றன் மஹ்ரூபின் மூத்த சகோதரரியுமான றோஹினா மஹ்ரோஃப் மேற் கண்டவாறு தெரிவித்தார்.

rohina mahroof

மேலும் றோஹினா மஹ்ரூஃபிடம் கேட்கப்பட்ட கேள்விகளான….

01- இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் பெண்களுக்கு 25 சதவீதம் அரசியலில் சம உரிமை கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அந்த வகையில் தற்பொழுது உள்ள பாராளுமன்றத்தில் முஸ்லிம் பெண்களினுடைய பிரதி நிதித்துவம் பூச்சியமாக உள்ள நிலையில் முஸ்லிம் பெண்கள் அரசியலில் சாதிக்க முடியும் என நினைக்கின்றீர்களா.?

02- உங்களுடைய தந்தை வழியில் அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்துள்ள நீங்கள் வருகின்ற மாகாண சபை தேர்தலில் நீங்கள் களமிறங்கினால் உங்களுக்கு சகோதரர் இம்றான் மஃரூபினுடைய பூரண ஆதரவு கிடைக்குமா.?

03- சகோதரர் இம்றான் மஹ்ரூஃபினுடைய ஆசீர்வாதம் அல்லது ஆதரவு கிடைக்காத பட்சத்தில் உங்களுடைய அரசியல் நகர்வின் அடுத்த கட்ட நிகழ்வு எதுவாக அமையும்.?

04- இளம் வயதியுடைய நீங்கள் முஸ்லிம் மதத்தினை பின்பற்றுபவராக இருக்கின்றீர்கள். இஸ்லாமிய மார்க்க சட்டதிட்டங்கள் பலவாறு இருக்கின்ற நிலையிலும், பெரும்பான்மையாக வேற்று மதத்தினை பின்பற்றுபவர்கள் வாழுகின்ற இந்த நாட்டில் எவ்வாறு நீங்கள் துணிவுடன் அரசியலில் குதிக்க நினைத்தீர்கள்.? எவ்வாறு உங்கள் மீது தொடுக்கப்படுக்கின்ற வேட்டுக்களை சமாலிப்பீர்கள்.?

05- அவ்வாறு நீங்கள் வருகின்ற மாகாண சபை தேர்தலில் களமிறங்கினால் முஸ்லிம் பெண் என்ற அடிப்படையில் உங்களை நோக்கி வருகின்ற விமர்சனங்களுக்கும், அரசியல் ரீதியிலான எதிர்ப்புக்களையும் சமாலிக்கும் மனவலிமை உங்களுக்கு இருக்கின்றதா.?

06- ஐக்கியதேசியக் கட்சியினை பிரதி நிதித்துவப்படுத்துகின்ற நீங்கள் உங்களுடைய கட்சியும் அதன் தற்போதைய தலைமையும் இந்த நாட்டு முஸ்லிம்களின் இன ரீதியிலான பிரச்சனைகள், மீள்குடியேற்றம், காணிப்பிரச்சனைகளை பக்கசார்பின்றி தீர்த்து வைக்கும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கின்றதா.?

07- கிண்ணியாவினை பொறுத்த மட்டில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை என பல அரசியல் தலைமைகள் இருக்கதக்க திருகோணமலை மாவட்டத்தில் நீங்கள் வருகின்ற மாகாண சபை தேர்தலில் களமிறங்கினால் எதிர் நீச்சலடித்து சாதிப்பீர்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கின்றதா.?

08- தற்பொழுது திருகோணமலையில் தலை விரித்தாடுகின்ற சிங்கள பேரினவதத்தின் இன ரீதியான செயற்பாடுகளை நீங்கள் எந்த கோணத்தில் பார்க்கின்றீர்கள்.?

09- பொதுவாக குர் ஆன் மத்ர்சாக்கள், பெண்கள் மத்ர்சாக்கள் என இஸ்லாமிய வட்டத்திற்குள்ளும், இஸ்லாமிய மார்க்க விடயங்களுக்கான உதவிகளை அதிகப்படியாக நீங்கள் செய்து வருவதற்கான காரணம் என்ன.?

10- திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா, தோப்பூர், கந்தளாய், மற்றும் மூதூர் பிரதேசங்களில் உள்ள பெண்கள் எதிர் நோக்கும் முக்கிய பிரச்சனைகளாக நீங்கள் எதனை பார்க்கின்றீர்கள்.? அதனோடு சேர்த்து உடனடியாக பெண்கள் விடயங்கள் சம்பந்தமாக அப்பிரதேசங்களில் தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் என நீங்கள் எதனை கருதுகின்றீர்கள்.?

11- கிழக்கு மாகாணத்தில் மூதூர் பிரதேசத்திலேயே அதிகமான பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை வாய்ப்பிற்காக செல்கின்றார்கள். நீங்களும் பெண் என்ற அடிப்படையில் வருகின்ற மாகாண சபை தேர்தலில் வெற்றியடைந்தால் அரசியல் ரீதியாக வெளிநாடு செல்லும் மூதூர் பெண்களினுடைய பிரச்சனைகளை எவ்வாறு தீர்த்து வைப்பீர்கள்.?

12-நீங்கள் சிறுவயது முதலே வெளி மாவட்டங்களில் உயர்தர பாடசாலைகளில் கல்வி கற்று மேல் மாகாணத்திலே வாழ்ந்து வருகின்றீர்கள். அந்த அடிப்படையில் திருகோணமலை மாவட்ட பெண்களினுடைய பிரச்சனைகளை குறுகிய காலத்தில் தீர்த்து வைக்க முடியும் அல்லது அதற்கு இன்னும் நீண்ட காலம் தேவைப்படுமா./ எந்த முடிவில் நீங்கள் பெண்களுக்கு அரசியல் ரீதியாக தலைமை தாங்க முன் வந்துள்ளீர்கள்.?

13- நீங்கள் வருகின்ற மாகாண சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பாக மாகாண சபை உறுப்பினராக வரும் பட்சத்தில் உங்களுடைய சகோதரரும், பாராளுமன்ற உறுப்பினருமான இம்றான் மஃரூபினை மாவட்டத்தின் அரசியல் தலைமையாக ஏற்று அவருக்கு கீழே உங்களுடைய அரசியல் பயணத்தினை முன்னெடுப்பீர்களா.? அல்லது உங்களது அரசியல் நகர்வுகள் தனி வழியினை கொண்டிருக்குமா.?

14- கிண்னியா பிரதேசத்தினை அண்மைகாலமாக ஆட்டிப்படைக்கின்ற டெங்கு நோய்கான காரணங்கை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

15- உங்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தற்கு பிற்பாடு விதவை பெண்களுக்களுக்காக நீங்கள் முன்னெடுக்க இருக்கும் நடவடிக்கைகள் என்ன.?

16- கிழக்கு மகாணத்தில் உள்ள ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடுகின்ற பொழுது திருகோணமலை மாவட்டத்தில் காலாலமாக அரசியல் அதிகாரமிக்க முஸ்லிம் பிரதி நிதித்துவங்கள் இருந்தும் ஏன் திருகோணமையில் உள்ள முஸ்லிம் பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்படவில்லை. அதற்கான காரணங்கள் என்ன.?

17- உங்களுடைய எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் சம்பந்தமாகவும், வருகின்ற மாகாண சபை தேர்தலில் பரவலாக நீங்கள் களத்தில் குதிக்க இருப்பது சம்பந்தமாகவும் மக்களுக்கு நீங்கள் தெரிவிக்க விரும்புவது என்ன.?
போன்ற முக்கிய பதினேழு கேள்விகளுக்கு திருகொணமலை பெண்களின் விடிவிற்காக ஐக்கிய தேசிய கட்சி மூலம் களத்தில் குதிக்க தயாராகி வரும் பாராளுமன்ற உறுப்பினர் இம்றான் மரூஃபின் மூத்த சகோதரரி றோஹினா மஹ்ரூஃப் வழங்கிய விரிவான பதில்களின் காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s