பித்னாக்கள் நிறைந்த ஒரு கால கட்டத்தில் சத்தியத்திற்கு தஜ்ஜாலும் உரிமை கோரலாம்

inamullahமத்திய கிழக்கில், ஆசியாவில், ஆபிரிக்காவில் இடம் பெறும் யுத்தங்கள் அழிவுகள் யாவும் பெற்றோல் மற்றும் இயற்கை எரிவாயு, கணியவளங்கள் வர்தகம் தொடர்பானவை. பின்புலத்தில் பிராந்திய மற்றும் சர்வதேச மேலாதிக்க நவகாலனித்துவ மற்றும் ஆக்கிரமிப்பு சக்திகள் அணி சேர்ந்திருக்கின்றன. மூன்றாம் உலகப் பேரழிவு முஸ்லிம் உலகில் திணிக்கப்பட்டுள்ளது என்றே கூறலாம்.

யுக முடிவின் போது ஏற்படுகின்ற பித்னாக்களை அழிவுகளை உம்மத்து கடந்து கொண்டிருக்கிறது.

அல்லாஹ்வை மாத்திரம் அஞ்சி சகல விதமான பற்றுதல்கள் இலாப நஷ்ட கணிப்பீடுகள் என்பவற்றிற்கு அப்பால் நிதானமாக சத்தியம் அசத்தியம், நீதி நியாயம் என்பவற்றை உணர்ந்து எமது ஆன்மீகம் சார்ந்த நிலைப்பாடுகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேற்படி பித்னாக்களின் பொழுது ஒட்டு மொத்த உம்மத்தும் சோதிக்கப் படுவது போன்று ஒவ்வொரு ஆன்மாவும் தனித்தனியாக சோதிக்கப் படுகின்றன என்பதனை நாம் மனதில் கொள்தல் வேண்டும்.

அதேவேளை, எமது பிராந்தியத்தில் தொழிற்படுகின்ற இஸ்லாமிய விரோத சக்திகளுக்குப் பின்னாலும் அதே சர்வதேச சதிநாசகார சக்திகள் இருக்கின்றன, அரசியல் பொருளாதார இராணுவ இராஜ தந்திர கெடுபிடிகள் இருக்கின்றன.

பித்னா எங்கள் வாசல்படிவரை வந்திருக்கும் நிலையில் நாம் வாக்கு வாதங்கள் இயக்க மற்றும் அரசியல் சர்ச்சைகளில் எங்கள் அதிக பிரசங்கித் தனங்களை காட்டிக் கொண்டு அழிவின் விளிம்பை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம்.

ஒவ்வொரு ஆன்மாவிற்கும் தான் இருக்குமிடத்தில் ஒரு சோதனை ஒர போராட்டம் இருக்கிறது, அது இன்மையின் இலாப நஷ்டக் கணக்குகளோடு முடிவதில்லை, நாளை எமது மரணம், மஹஷர், மறுமை வாழ்வு என நீண்டு செல்கிறது.

அறபு நாடுகளின் உள்நாட்டு மற்றும் பிராந்திய அரசியலை அந்த நாட்டு பொதுமக்களோ, புத்திஜீவிகளோ உலமாக்களோ தீர்மானிப்பதில்லை.

அந்த நாடுகளின் மன்னர்களும் ஆட்சியாளர்களும் எந்தெந்த சர்வதேச பிராந்திய சக்திகளின் (கெடு)பிடிக்குள்
இருந்தார்கள், இருக்கின்றார்கள், இருப்பார்கள் என்பதை அறிவோம். அவதானித்துக் கொண்டு விழிப்பாக இருந்து கொள்ளுங்கள்.

தயவு செய்து பித்னாக்கள் அதிகரித்துச் செல்லும் இந்த நெருக்கடியான கால கட்டத்தில் ஆட்சியாளர்களின் அழுங்குப் பிடியில் அகப்படிருக்கும் உலமாக்களை மற்றும் பொதுமக்களை தூற்றுவதில் இருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.

அறிவு பூர்வமாக உயரிய இஸ்லாமிய பண்பாடுகள் பேணி கருத்துக்களை நிலைப்பாடுகளை ஆக்கபூர்வமாக விமர்சிப்பதில் தவறு இல்லை, கடமையும் கூட.

குறிப்பாக வளைகுடா அயசியலின் ஆழ அகலங்கள் தெரியாமல், இராஜதந்திர, இராணுவ, பொருளாதார மூலோபாய நகர்வுகள் குறித்த அறிவு இல்லாமல், இஸ்லாமிய இயக்க காழ்ப்புணர்வு பரப்புரைகளை இங்கு சந்தைப்படுத்த வேண்டாம்.

பித்னாக்கள் நிறைந்த ஒரு கால கட்டத்தில் சத்தியத்திற்கு தஜ்ஜாலும் உரிமை கோரலாம்.

முஸ்லிம் உம்மத்தின் பொது எதிரிகள் உண்மையான அணியிணை இலக்கு வைத்து இனம் காட்டித் தருவார்கள்.

எல்லோரும் அல்லாஹ்விடம் உம்மத்தின் விடிவிற்கும் விமோசனத்திற்குமாக பிரார்திப்போம்.

யா அல்லாஹ் ஹக்கை ஹக்காகவும் பாதிலை பாதிலாகவும் எங்களுக்கு நீ தெளிவாக உணர்த்துவாயாக!

என்று அதிகமதிகம் பிரார்தித்துக் கொள்ளுங்கள்.

  • ம. இனாமுல்லாஹ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s