அமைச்சர் சம்பிக்கவை விமர்சித்தால் மஹிந்தவாதிகள் பதறுவது ஏன்- கிழக்கு மாகாண சபை உறுப்பினர் லாஹிர் கேள்வி

mahindaஅமைச்சர் சம்பிக்க பகிரங்கமாக முன்னெடுத்துவரும் இனவாதத்துக்கு ஆதரவான கருத்துக்களுக்கு எதிராக கிழக்கு முதல்வர் குரல் கொடுத்த போது அவரை ஆட்சி துறக்க வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித்தலைவர் உதுமாலெப்பை கூறுவது வேடிக்கையாக உள்ளது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் லாஹிர் தெரிவித்தார்,

கடந்த மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சி காலத்தில் அவரின் செல்லப்பிள்ளையாக இருக்கும் போது இவ்வாறான இனவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட போது மௌனம் காத்த அதே பழக்க தோஷத்திலேயே இன்று முஸ்லிங்களுக்கு எதிராக செயற்படும் சம்பிக்க ரணவக்க அவர்களுக்கு எதிராக கிழக்கு முதலமைச்சர் குரல் எழுப்பும் போது அதற்கு எதிராக உதுமான்லெப்பை அறிக்கை விடுவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் லாஹிர் கூறினார்

கிழக்கு முதலமைச்சர் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் இனவாத செயற்பாடுகளை விமர்சித்தமைக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் எம் எஸ் உதுமான்லெப்பை தெரிவித்த கருத்து தொடர்பில் பதிலளித்த போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் லாஹிர் இதனைக் கூறினார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம் எச் லாஹிர்,

கிழக்கு மாகாண முதலமைச்சர் தமது பதவியைத் துறக்க அவர் அரசாங்கத்தின் ஆதரவுடனோ அல்லது அரசாங்கத்தின் துணையுடனோ ஆட்சியமைக்கவில்லை என்பதை முதலில் எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை புரிந்து கொள்ள வேண்டும்.

அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்தே கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைத்துள்ளார் என்பதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியிலேயே உள்ளது என்பதை அறிந்திராதவராக கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் உள்ளமை வேடிக்கையாக உள்ளது.

அத்துடன் இன்று அமைச்சர் சம்பிக்க போன்ற இனவாதக் கருத்துடையவர்களை அரசாங்கம் வௌியேற்ற வேண்டும் எனக் கூறியதற்காய் முதலமைச்சர் ஆட்சி துறக்க வேண்டும் எனக் கூறும் உதுமாலெப்பை இதே நல்லாட்சியில் இன்று மாவட்டத்தின் இணை அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவியை தூக்கி எறிந்து அரசாங்கத்துக்கு தமது எதிர்ப்பை வௌிக்காட்ட முன்வருவாரா??

கடந்த ஆட்சியில் அளுத்கமை பற்றி எரிந்த போது முஸ்லிங்களுக்கு பாங்கு சொல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போது பள்ளிகளில் பன்றி இறைச்சி வீசப்பட்ட போது எமது சகோதரிகளின் பர்தாக்களை கழற்றி எறிந்த போது மஹிந்தவின் செல்லப்பிள்ளைகளாக சுகபோகங்களை அனுபவித்து ஆட்சியை எந்தக் குறையும் சொல்லாமல் அமைதிகாத்த இவர்கள் இன்று இனவாதிகளுக்கு எதிராய் குரல் கொடுக்கும் போது அறிக்கை விடுகின்றார்கள்,

மஹிந்தவுக்கு சால்வை போர்த்தி முத்தம் கொடுக்குமளவு அவருடன் நெருங்கிய தொடர்பை பேணிய இவர்கள் அன்று அவருக்கு உரிய அழுத்தத்தை கொடுத்து உரியவர்களை கட்டுப்படுத்தியிருக்கலாம் அல்லவா,

அதையெல்லாம் செய்யாது இன்று ஒருவர் தைரியமாக முஸ்லிங்களுக்கு எதிராக இனவாதங்களை முன்னெடுக்கும் அமைச்சரை அடையாளப்படுத்தி அவர் குறித்து அரசாங்கத்தை எச்சரிக்கும் போது அவருடன் இணைந்து இனவாதிகளுக்கு எதிராய் குரல் கொடுப்பதை விடுத்து குரல் கொடுப்போருக்கு எதிராய் அறிக்கை விடும் முஸ்லிம் அரசியல்வாதிகள் உள்ளமை சமூகத்தின் சாபக்கேடுகள் என்பதில் சந்தேகமில்லை,

இதேவேளை இரவில் மைத்திரி வீட்டிலும் பகலில் மஹிந்தவுடனும் காலம் கடத்தும் கொள்கையில்லாத உலமாக கட்சியினர் குறித்து பேசுவதற்கு ஏதும் இல்லையென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் லாஹிர் கூறினார்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s