கத்தாருக்கு மேலும் 48 மணிநேர அவகாசம்

Saudi trumpறியாத்: சவுதி அரேபியா மற்றும் மூன்று பிற அரபு நாடுகள், தாங்கள் விதித்த கோரிக்கைகளை நிறைவேற்ற கத்தாருக்கு மேலும் இரண்டு நாட்கள் அவகாசம் அளித்துள்ளனர். இரண்டு நாட்களுக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் கத்தார் கூடுதல் தடைகளை எதிர்கொள்ள வேண்டும். ஞாயிற்றுக்கிழமைக்குள் அல் ஜசீரா தொலைக்காட்சியை மூடுவது உள்ளிட்ட 13 கோரிக்கைகளை கத்தார் நிறைவேற்ற வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

திங்களன்று, தனது அதிகாரப்பூர்வ பதிலை, கடிதமாக குவைத்திற்கு வழங்குவதாக வளைகுடா நாடான கத்தார் தெரிவித்திருந்தது. கத்தார் தீவிரவாதத்திற்கு நிதி ஆதரவு வழங்குவதாக அண்டை நாடுகளால் குற்றம் சுமத்தப்பட்டது; ஆனால் கத்தார் அதனை மறுக்கிறது.

சனிக்கிழமையன்று இந்த கோரிக்கைகளை கத்தார் நிராகரித்துவிட்டதாக கத்தாரின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷேக்-முகமத்-பின்-அப்துல் ரஹ்மான்-பின்-ஜசிம்-அல்-தனி தெரிவித்தார்; ஆனால் நியாயமான நிலைகளில் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுவரை இல்லாத அளவிற்கு, சில வாரங்களாக சவுதி மற்றும் அதன் கூட்டணி நாடுகளான எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்டுகள் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளிடமிருந்து ராஜரீக மற்றும் பொருளாதார தடைகளை கத்தார் எதிர்கொண்டு வருகிறது.

ஜூன் 23ஆம் தேதி இந்த நான்கு நாடுகளும் கத்தாருக்கு, துருக்கி ராணுவத் தளத்தை மூடுவது மற்றும் இரானுடனான ராஜரீக உறவுகளை துண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கையை நிறைவேற்ற பத்து நாட்கள் கால அவகாசம் வழங்கியது. மேலும் இந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் நிலவி வரும் சூழல் குறித்து விவாதிக்க புதன்கிழமையன்று சந்திக்கவுள்ளனர்.

எண்ணெய் வளம் மற்றும் எரிவாயு வளம் மிகுந்த நாடான கத்தார் தனது 2.7 மில்லியன் மக்கள் தொகையின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற இறக்குமதிகளை நம்பியிருக்கும் நிலையில் இந்த தடைகள் கத்தாரில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதன் விளைவாக இரான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து அதிகப்படியான உணவு மற்றும் பிற பொருட்கள் கத்தாருக்கு விநியோக்கிக்கப்படுகின்றன.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s