Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • கட்டார் மற்றும் அமெரிக்கா பயங்கர வாதத்திற்கு எதிரான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன

    கொழும்பு: அமெரிக்க இராஜாங்க அமைச்சர் அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் மற்றும் கட்டார் வெளியுறவு அமைச்சர் ஷெய்க் முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான் அல் தானி ஆகிய இருவரும் நேற்று கட்டார் தலை நகர் தோஹாவில் பயங்கரவத்த்திற்கு எதிராக போராடுவது குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் நேற்று 11/07/2017 கைச்சாத்திட்டனர்.

  • கடலில் அடித்து செல்லப்பட்ட யானையை காப்பாற்றிய கடற்படை

    முல்லைத்தீவு: கடலில் அடித்து செல்லப்பட்டு உயிருக்காக போராடி கொண்டிருந்த காட்டு யானையொன்று கடற்படையினரால் பார்க்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்கிழமை முல்லைத்தீவு மாவட்டம் கொக்கிளாய் கடல் பிரதேசத்தில் 8 கடல் மைல் தொலைவில் குறித்த கடலில் மூழ்கி உயிருக்காக போராடிக்கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டதாக இலங்கை கடற்படை தகவல் வெளியிட்டுள்ளது.

  • இலங்கை அணியின் படுதோல்விக்கு அரசியல் பின்னணியா..?

    கொழும்பு: இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 3க்கு 2 என்ற அடிப்படையில் ஜிம்பாப்வே அணி கைப்பற்றியுள்ளது. இது ஜிம்பாப்வே அணியுடன் இலங்கை அணி பெற்று கொண்ட முதல் தொடர் தோல்வியாகும். இதேவேளை இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இறுதி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்துள்ள நிலையில், அனைத்து கிரிக்கட் ரசிகர்களும் இது தொடர்பில் அதிகளவில் உரையாடி வருகின்றனர்.

  • இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமனம்

    டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தலமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். பந்துவீச்சு  பயிற்சியாளராக ஜாகீர் கானும், வெளிநாடுகளில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் ஆடும்போது துடுப்பாட்ட ஆலோசகராக ராகுல் திராவிட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய கிரிக்கெட் வாரியம், பிசிசிஐ, செவ்வாய்க்கிழமை இந்த அறிவிப்பை வெளியிட்டது.

  • தன்னை பாலியல் துஸ்பிரயோகம் செயத பொலிஸ் அதிகாரியை அடையாளம் காட்டினார் மியன்மார் அகதிப் பெண்

    கொழும்பு: மிரிஹான முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்ணை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தரை குறித்த பெண் அடையாளம் காட்டியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் முன்னதாகவே பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த வழக்கு நேற்று நுகேகொட மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

  • “சீக்கிரம் ஒரு விக்கெட்டை எடுங்கள், மற்றையவையெல்லாம் சரிந்துவிடும்”

    லாஹூர்: சம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டியின் போது இந்திய அணியின் தலைவர் கோஹ்லியும், பும்ராவும் தன்னை ஸ்லெட்ஜ் செய்ததாக பாகிஸ்தான் அணி வீரர் பகார் ஸமான் கூறியுள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்ற சம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதிய ஆட்டத்தில், பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது. பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் பகார் ஸமான்.

  • சர்வதேச உலமாக்கள், அறிஞர்கள் மாநாட்டுக்கு 5 உலமாக்கள் பங்கேற்பு

    ஆர். ஹஸன் காத்தான்குடி: இந்தோனேசியாவின், சுமாத்ரா தீவில் எதிர்வரும் ஜுலை 16ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சர்வதேச உலமாக்கள், அறிஞர்கள் மாநாட்டுக்கு இலங்கை சார்பில் ஐந்து உலமாக்கள் கலந்து கொள்ளவுள்ளனர். அவர்களை ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தனது பூரண அனுசரணையில் அனுப்பிவைக்கவுள்ளது. உலகளாவிய ரீதியில் முக்கிய உலமாக்கள் மற்றும் அறிஞர்கள் கலந்து கொள்ளும் மேற்படி உலமாக்கள், அறிஞர்கள் மாநாடு எதிர்வரும் ஜுலை 16ஆம் திகதி இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவில் ஆரம்பமாகவுள்ளது. ஜுலை 23 திகதி வரை 7 நாட்கள்…

  • “கொழும்பு, பேராதனை பல்கலைக்கழகங்கள் தனியாருக்கு வழங்கப்படாது”

    கொழும்பு: கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிலிருந்து அகற்றி அவற்றை தனியார் துறைக்கு வழங்கும் நோக்கம் எதுவும் இல்லையென அரசாங்கம் அறிவித்தது. நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல இதனை நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

  • தந்தையால் 14 வயது மகள் துஷ்பிரயோகம்

    வவுனியா: வவுனியா தாலிக்குளம் பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி கர்ப்பமுற்றமை தொடர்பில், இடம்பெற்ற விசாரணையில், சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியமை தெரிய வந்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் வன்னி பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையில் செயற்படும் தமிழ் மொழி மூல தொலைபேசி முறைப்பாட்டு பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

  • பிலிப்பைன்ஸில் ஐ.எஸ். தீவிரவாதியாக செயற்பட்ட இலங்கையர் பலி!

    மனிலா: பிலிப்பைன்ஸ், மராவி நகரத்திற்குள் செயற்பட்ட பயங்கரவாதிகளை இலக்கு வைத்து பிலிப்பைன்ஸ் இராணுவத்தினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது ஐ.எஸ் பயங்கரவாதியாக செயற்பட்ட இலங்கையர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் மராவி நகரத்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட விமான தாக்குதலில் 329 பேர் உயிரிழந்துள்ளனர்.

  • நான்கு அமெரிக்க விசுவாச நாடுகளின் நிபந்தனைகளை நிராகரித்தது கத்தார்!

    டோஹா: கத்தாருக்கு எதிரான புறக்கணிப்பு ஒன்றிற்கு தலைமை வகிக்கும் நான்கு அரபு நாடுகளும், கத்தார் மீதான தடையை விலக்க முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை அந்நாடு நிராகரித்துள்ளதை பிராந்திய பாதுகாப்பிற்கு ஓர் அச்சுறுத்தல் என வர்ணித்துள்ளன. அறிக்கை ஒன்றில், சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகள், கத்தாருக்கு எதிராக புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளன. ஆனால் என்ன நடவடிக்கை என்பதைக் குறிப்பிடவில்லை.

  • “அவசியம் ஏற்பட்டால் வட கொரியா மீது ராணுவ படைகள் பயன்படுத்தப்படும்”

    வோஷிங்டன் DC: கடந்த செவ்வாய்க்கிழமை நீண்ட தூரம் செல்லும் ஏவுகணையை வட கொரியா பரிசோதித்ததை அடுத்து, அவசியம் இருக்கும் பட்சத்தில் தேவையான அளவு ராணுவ படைகள் வட கொரியா மீது பயன்படுத்தப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க தூதுவர் நிக்கி ஹாலே, ஐ.நா. மன்றத்தில் வட கொரியாவுக்கு எதிராக புதிய தீர்மானம் ஒன்று தாக்கல் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

←Previous Page
1 … 117 118 119 120 121 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar