-
வரலாறு படைத்த மீராவோடை அல்-ஹிதாயா மாணவி
கல்குடா: கடந்த 2013 ஆம் எமது பாடசாலையில் க.பொ.த. உ/த இல் வெறும் 11 மாணவர்களுடன் விஞ்ஞான பிரிவு பல்வேறு சவால்களையும் தாண்டி ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிரகாரம் 2015 உ/த பரீட்சைக்கு மாணவர்களில் 9 பேர் சித்தியடைந்து பல்கலைக்கழக அனுமதிக்கான தகமையை பெற்றுக் கொண்டனர்.
-
க.பொ.த உ/த: முதல் 3 இடங்களைப்பெற்ற மாணவர்கள் விபரம்
கொழும்பு: இவ்வருடம் உயர் தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் நாடளாவிய ரீதியில், ஒவ்வொரு துறை சார்பாகவும் முதல் மூன்று இடத்தை பிடித்துள்ள மாணவர்களின் பட்டியலை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில், அகில இலங்கை ரீதியில் கணித பிரிவில் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் சிறிதரன் துவாரகன் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.
-
காத்தான்குடி தேர்தல் களம்
இனியவன் காத்தான்குடி: எதிர்வரும் 2018 பெப்ரவரியில் இடம்பெற இருக்கும் உள்ளுராட்சி சபைகளுக்கான காத்தான்குடி தேர்தல் களத்தின் இவ்வருட யுவர்காத்தான்குடி இனியவன் இறுதிக் கணிப்பை வாசகர்களுக்கு வழங்குகிறோம். இன்ஷா அல்லாஹ் தேர்தலுக்கு முன்னர் மேலும் 3 கணிப்புக்களை வழங்கவுள்ளோம்.
-
நடுவானில் பெற்றோரை நெகிழ்ச்சிக்குள்ளாக்கிய பிலிப்பைன்ஸ் விமானி!
மனிலா: பிலிப்பைன்ஸை சேர்ந்த ஜூவான் பாலோ ஃபெர்மின் என்ற விமானி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நடுவானில் தன் பெற்றோரை ஆச்சரியப்படுத்திய காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஃபேஸ்புக்கில் அவர் பதிவேற்றிய காணொளி ஒன்று லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு 10,000-க்கும் மேற்பட்டோரால் பகிரப்பட்டுள்ளது.
-
தபால் மூல வாக்களிப்பு ஜனவரி 25, 26 இல்
கொழும்பு: வேட்புமனு கோரப்பட்டுள்ள 341 உள்ளூராட்சி சபைகளுக்குமான தபால் மூல வாக்களிப்பு, எதிர்வரும் ஜனவரி மாதம் 25, 26ஆம் திகதிகளில் இடம்பெறும் என, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தபால் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பித்திருந்த அரச சேவையிலுள்ள ஊழியர்களின் பெயர்ப் பட்டியல், எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி உறுதிப்படுத்தப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்தார்.
-
உலகின் அதிகவேக சதம் சமன்
டெல்லி: இந்தூரில் இலங்கைக்கு எதிராக இந்தூரில் நேற்று இடம்பெற்ற (22) டி20 போட்டியில் இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் ரோகித்சர்மா 35 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர் வங்கதேசத்திற்கு எதிராக 35 பந்துகளில் சதமடித்தே இதுவரை டி20 போட்டிகளில் அதிகவேகமான சதமாக இருந்தது.
-
93 உள்ளூராட்சி சபைக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு
கொழும்பு: 93 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது இன்று (14) மதியம் 12 மணியுடன் நிறைவடைந்தது. வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர், அதற்கு எதிர்ப்புகளை முன்வைப்பதற்காக ஒரு மணி நேர கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதோடு, அதன் பின்னர் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களின் வேட்புமனுக்கள், தெரிவத்தாட்சி அலுவலர்களால் அறிவிக்கப்படவுள்ளன.
-
ஒரு மாதத்தில் மாத்திரம் கொல்லப்பட்ட ரோஹிங்ய முஸ்லிம்கள் 9000 பேர்
மியான்மரில் கடந்த ஆகஸ்ட் மாதம் வன்முறை வெடித்ததிலிருந்து ஒரு மாதத்தில் குறைந்தது 6,700 ரோஹிஞ்சாக்கள் கொல்லப்பட்டுள்ளதாக மெடிசின்ஸ் சான்ஸ் ஃப்ரான்டியர்ஸ் (எம்.எஸ்.எஃப்) அமைப்பு தெரிவித்துள்ளது. மியான்மர் அரசு 400 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது ஒப்பிடத்தக்கது.
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மூத்த போராளி சுபியான் தாக்கப்பட்டார்
அ.மு. அஸ்ஜாத் அட்டாளைச்சேனை: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முக்கிய மூத்த போராளி சுபியான் என்று பிரபலமான எம்.ஏ.சி.ரமீஸ் இன்று இரவு முஸ்லிம் காங்கிரசின் மத்திய குழு பிரதானி அடிநாதம் என்று அழைக்கப்படும் வாகித் என்பவரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:
-
பலஸ்தீனுக்காக லெபனானில் அமெரிக்கத் தூதரகம் முன் வெடித்த வன்முறை
பெய்ரூத்: ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்க அதிபர் டிரம்பின் முடிவை எதிர்த்து, லெபனான் தலைநகர் பெய்ரூத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு வன்முறை மோதல்கள் வெடித்துள்ளன.கருப்புக் கொடி ஏந்திய போராட்டக்காரர்களை தடுக்க, கண்ணீர் புகைகுண்டுகள் மற்றும் தண்ணீர் பீரங்கியை அவர்கள் மீது பாதுகாப்பு படையினர் பீய்ச்சி அடித்தனர்.
-
இங்கிலாந்து: மில்டன் கெய்ன்ஸில் இந்திய குடும்பங்களை குறிவைத்து நடத்தப்படும் திருட்டு
லண்டன்: இங்கிலாந்து, மில்டன் கெய்ன்ஸின் புறநகர்ப்பகுதியில் சஞ்சய் டாங்க் வசிக்கின்ற வீட்டிற்குச் சென்றபோது, அவர் வீட்டில் தனியாக இருந்தார். அவரது வீட்டில் சில வாரங்களுக்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்டிருந்தாலும், அவர் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. “அவர்கள் இங்கிருந்து வந்தார்கள்,” என்று அவர் தனது வீட்டில் உள்ள ஒரு கதவை சுட்டி காண்பித்தார். அதன் பின்னர், சிதைந்த கதவுகளின் படங்களை என்னிடம் காட்டினார்.
-
தேசிய பாடசாலைகளுக்கு 1288 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்
பா.திருஞானம் அபேகம: நாட்டில் காணப்படும் தேசிய பாடசாலைளுக்கு கணிதம்¸ விஞ்ஞானம், வர்த்தகம், தொழில்நுட்பம், விவசாயம் உட்பட உயர்தர தொழில்நுட்ப பாடங்ளுக்கான 1288 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு 08.12.2017 அபேகம வளாகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் உட்பட அமைச்சின் செயலாளர்கள் அதிகாரிகள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.