Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ஐ ஃபோன் கடந்துவந்த கடினமான பாதை

    லண்டன்: சரியாக 11 வருடங்களுக்கு முன்னால் சிலிக்கன் வேலியில், நீல நிற ஜீன்ஸ், கருப்பு நிற சட்டை அணிந்து வந்த அவர் தனது கால் சட்டைப் பையில் இருந்து ஒரு சிறு இயந்திரத்தை எடுத்து ”புரட்சிக்கான ஒரு துண்டு இது” என குறிப்பிட்டார். அவர் சொன்னது சரிதான். அந்த மனிதர் பெயர் ஸ்டீவ் ஜாப்ஸ். அந்த கையடக்க இயந்திரம்தான் முதல் ஆப்பிள் ஐஃபோன்.

  • தபால் மூல வாக்குகள் விநியோக நடவடிக்கை ஜனவரி 13 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது

    கொழும்பு: ஜனவரி 11ம் திகதி இடம்பெறவிருந்த தபால் மூல வாக்குகள் விநியோக நடவடிக்கை எதிர்வரும் ஜனவரி 13 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறித்த அறிவித்தலை விடுத்துள்ளார். தபால் மூல வாக்குகளுடன், வேட்பாளர்களின் பெயர் பட்டியலையும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த பெயர் பட்டியலை அச்சிடுவதில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல் காரணமாக குறித்த பணிகள் தாமதமடைந்ததால் குறித்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

  • சீருடை வவுச்சர் செல்லுபடியாகும் காலம் ஜன. 30 வரை நீடிப்பு

    கொழும்பு: அரசாங்க பாடசாலைகளில் மாணவர்களுக்கு சீருடைகளை பெற்றுக்கொள்வதற்காக வழங்கப்படும் வவுச்சர்கள் செல்லுபடியாகும் காலம் ஜனவரி 30 வரை நீடிக்கப்பட்டுள்ளது.கல்வியமைச்சு விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • ஊழலை ஒழிக்க முனையும் கட்சிகளின் மகா தவறு

    இனியவன் காத்தான்குடி: உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான முஸ்தீபுகள் முஸ்பாத்திகளாக வழமைபோன்று காத்தான்குடியில் களைகட்டுகிறது. அல்லாஹ்வின் நாமத்தைக்கொண்டு ஆரம்பிக்கும் தேர்தல் மேடைகள், இறுதியில் ஒருவரை ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த நிலையில் கூட்டங்கள் நிறைவடைகின்றன.

  • ஜனாஸா அறிவித்தல்

    காத்தான்குடி: காத்தான்குடி 3 செய்குல் பலாஹ் வீதியைச் சேர்ந்தவரும், ஓட்டமாவடியில் வசித்துவந்தவருமான முகம்மது முஸ்தபா முகம்மது பஸீர் (40),  07-01-2018 இரவு காலாமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

  • ஜன. 31 இற்கு முன் அலுவலகங்கள், கட்டவுட்கள் அகற்றப்பட வேண்டும்

    கொழும்பு: எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான அலுவலகங்கள், கட்டவுட்கள் போன்றவற்றை, ஜனவரி 31 இற்கு முன்னர் அற்றிக் கொள்ள வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரும் தேர்தல்கள் ஆணையாளருமான மஹிந்த தேசப்பிரிய இதனைத் தெரிவித்தார்.

  • கொடூரக் காதல் கொலை

    காதலனொருவர் தனது காதலியின் கழுத்தை வெட்டி கொலைசெய்ததுடன் தனது கழுத்தையும் வெட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பன்னல பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் பன்னல ஜயகம பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  • ஸஹ்ரான் மௌலவியின் மௌனம் உணர்த்துவது என்ன..?

    AK-79-YKK காத்தான்குடி: தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் (முன்னாள்) பிரதம பிரச்சாரகர் மௌலவி எம்.சி.எம். ஸஹ்ரான், அவ்வமைப்பிலிருந்து நீக்கப்பட்டதாக தே. தௌ. ஜமா (NTJ) அத்தின் கடிதத்தலைப்பைக் கொண்ட ஓர் அறிவித்தலை அண்மையில் முகநூலில் காணக்கிடைத்தது. தொழிநுட்பம் அதி உச்சத்தில் இருக்கும் இக்காலத்தில் இவ்வாறான அறிவித்தல்களை கண்மூடித்தனமாய் நம்ப முடியாது.

  • பாலியல் வன்புணர்வை தடுக்கும் உள்ளாடை

    டெல்லி: உலகம் முழுவதும் உள்ள பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாவதை தனது கண்டுபிடிப்பு தடுக்கும் என்று நம்புகிறார் இந்தியா, உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு இளம்பெண். சீனூ என்ற இளம் பெண் உருவாக்கியிருக்கும் பெண்களுக்கான உள்ளாடையில் பொருத்தப்பட்டிருக்கும் ஒருவிதமான பூட்டு அமைப்பு பெண்கள் பாலியல்ரீதியாக வன்புணர்வு செய்யப்படுவதை தடுக்கும். தனது கண்டுபிடிப்புக்கு ‘ரேப் ப்ரூஃப் பேண்ட்டி’ என்று சீனூ பெயரிட்டுள்ளார்.

  • காத்தான்குடியில் ‘மஹிந்த காரியாலயம்’ திறந்து வைப்பு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலுடன் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியல் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காத்தான்குடி பிரதேசத்திற்கான தலைமைக் காரியாலய திறப்பு விழா 28-12-2017 நேற்று வியாழக்கிழமை பிற்பகல் காத்தான்குடியில் இடம்பெற்றது.

  • உங்களைப் பற்றி கூகுள் தெரிந்து வைத்திருப்பதை அழிப்பது எப்படி?

    நீங்கள் எவற்றைத் தேடுகிறீர்கள், எதை விரும்புகிறீர்கள், நீங்கள் பார்க்கும் தளம் போன்றவை இதற்குத் தெரியும். உலகின் மிகவும் பிரபலமான தேடல் தளமாக கூகுளை பற்றிதான் நாங்கள் பேசுகிறோம். ”நீங்கள் கூகுள் சேவைகளைப் பயன்படுத்தும்போது, உங்கள் தரவுகளை நம்பி அளிக்கிறீர்கள்”

  • காத்தான்குடி நகரசபைத் தேர்தலுக்கு பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் தலைமையிலான முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு

     – எம்.ரீ. ஹைதர் அலி காத்தான்குடி: ஊழலற்ற நகர ஆட்சியினை முன்னோக்கி முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் தலைமையிலான அணியினர் இம்முறை காத்தான்குடி நகரசபைத் தேர்தலுக்கான பிரதான போட்டியாளர்களாக முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்தி கழமிறங்கியுள்ளனர்.

←Previous Page
1 … 103 104 105 106 107 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar