ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மூத்த போராளி சுபியான் தாக்கப்பட்டார்

  • அ.மு. அஸ்ஜாத்

slmc sufiyanஅட்டாளைச்சேனை: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முக்கிய மூத்த  போராளி சுபியான் என்று பிரபலமான எம்.ஏ.சி.ரமீஸ் இன்று இரவு முஸ்லிம் காங்கிரசின் மத்திய குழு பிரதானி அடிநாதம் என்று அழைக்கப்படும் வாகித் என்பவரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:

இன்று பாலமுனைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் உலங்குவானூர்த்தியில் வருகை தந்து அட்டாளைச்சேனைப் பிரதேச சபைக்கான வேட்பாளர்களை ஒழுங்கு செய்து விட்டு போனதன் பின்னர் அட்டாளைச்சேனை அரபா வட்டாரத்தில் முன்னாள் உறுப்பினரான எஸ்.எல்.முனாஸை தலைவர் நேரடியாக நியமித்தமை அட்டாளைச்சேனை மத்திய குழுவில் இருக்கும் சிலருக்கு பிடிக்கவில்லை. அது சம்மந்தமாக என்னை சமரசம் பேசுவதற்காக முன்னாள் உறுப்பினர் ஒருவர் அழைத்து அங்கு சென்ற போது குறித்த வாகித் என்னும் நபர் அங்கிருந்தார்.

slmc sufiyan

என்னைக் கண்டதும் நல்ல முறையில் பேசிய அவர் என் முன் வந்து நீ எப்படா கட்சிக்குள் வந்தாய் என்று இன்னும் பல வார்த்தைகள் சொல்லி என்னை மிக மோசமாகத் தாக்கினார். அவரின் வயதைக் கருத்தில் கொண்டு நான் எதுவும் செய்யாமல் அவரின் அடிகளைத் தாங்கினேன் பின்னர் அங்கு நின்றவர்கள் என்னையும் குறித்த நபரையும் விலக்கி விட்டனர்.

அத்துடன் வாகித் என்பவர் என்னை நெஞ்சில் தாக்கிய காரணத்தினால் எனக்கு சுவாசிப்பது மற்றும் நெஞ்சுக்குள் அதிக வலி காரணமாக நான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளேன்.

எனவே இப்படியான் காட்டுமிராண்டித் தனமான தாக்குதல்களை உடனடியாக கைவிட வேண்உம் என்னைத் தக்கிய நபர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டும் என்று போராளி சுபியான் ஊடகங்களைக் கேட்டுக்கொண்டார்.

தாக்கப்பட்ட போராளி சுபியான் தொலைபேசி இலக்கம்: 077 224 6667

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s