பலஸ்தீனுக்காக லெபனானில் அமெரிக்கத் தூதரகம் முன் வெடித்த வன்முறை

lebanon palaestineபெய்ரூத்: ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்க அதிபர் டிரம்பின் முடிவை எதிர்த்து, லெபனான் தலைநகர் பெய்ரூத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு வன்முறை மோதல்கள் வெடித்துள்ளன.கருப்புக் கொடி ஏந்திய போராட்டக்காரர்களை தடுக்க, கண்ணீர் புகைகுண்டுகள் மற்றும் தண்ணீர் பீரங்கியை அவர்கள் மீது பாதுகாப்பு படையினர் பீய்ச்சி அடித்தனர்.

முன்னதாக அமெரிக்காவின் இந்த முடிவிற்கு அரபு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. மத்திய கிழக்கு நாடுகள் அமைதிப் பேச்சுவார்த்தையின் தரகராக அமெரிக்காவை இனி நம்ப முடியாது எனவும் அரபு நாடுகள் விமர்சித்திருந்தது.

lebanon palaestine

yourkattankudy/worldnews

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஆக்கர் மாவட்டத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் உள்ள சாலையில் தீவைத்து, கற்களை எரிந்தனர்.இந்நிலையில், தூதரகத்திற்கு செல்லும் பிரதான சாலையை தடுப்பரண்கள் வைத்து பாதுகாப்பு படையினர் தடுத்துள்ளனர்.

எனினும், முட்கம்பியில் ஏறிய சில ஆர்ப்பாட்டக்காரர்கள் தூதரகத்திற்குள் செல்ல முயற்சித்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.கருப்பு வெள்ளை துண்டுகள் அணிந்திருந்த அவர்கள், அதிபர் டிரம்பை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு குழுவினர் டிரம்பின் உருவ பொம்மைக்கு தீ வைத்தனர். லெபனான், ஆயிரக்கணக்கான பலஸ்த்தீன அகதிகளின் வாழ்விடமாக திகழ்கிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s