• இனியவன்

kattankudy election local 2காத்தான்குடி: எதிர்வரும் 2018 பெப்ரவரியில் இடம்பெற இருக்கும் உள்ளுராட்சி சபைகளுக்கான காத்தான்குடி தேர்தல் களத்தின் இவ்வருட யுவர்காத்தான்குடி இனியவன் இறுதிக் கணிப்பை வாசகர்களுக்கு வழங்குகிறோம். இன்ஷா அல்லாஹ் தேர்தலுக்கு முன்னர் மேலும் 3 கணிப்புக்களை வழங்கவுள்ளோம்.

அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு ஆட்சி அதிகாரங்களை வழங்குகிறான்.

இதைத்ததவிர, வேறு எந்த தனிப்பட்ட காரணங்களையும் கருத்திற்கொள்ளாமல் காத்தான்குடியின் மக்களின் ஆதரவு அலைகள் எவ்வாறு இருப்பது என்பதே எமது கணிப்பு.

அல்லாஹ்வின் உதவியால் கடந்த 2015 ஜனாதிபதித் தேர்தலின் காத்தான்குடி களக்கணிப்பும், கடந்த 2015 பாராளுமன்றத் தேர்தலின் களக்கணிப்பும் எமக்கு வெற்றியளித்தது.

kattankudy election local 2

மேலும், தற்போதய காத்தான்குடி நிலவரப்படி சிப்லி பாரூக், பரீட் (சலுசலா) ஆகியோர் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமிருக்கின்றன.

கடந்த 2015 தேர்தலோடு, தனது அரசியல் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கிச் சென்றவர்களுக்கிடையில், 2015 இல் இருந்து இன்றுவரை காத்தான்குடி மக்களுக்கு ஏதாவது ஒரு சேவையை வழங்கி, பொது நலத்தைக் கருத்திற்கொண்டு பணியாற்றும் சிப்லி பாரூக்கின் ஆதரவுகள் வெளிப்படையாகவே அதிகரித்திருக்கின்றன. அவர் எந்தக் கட்சியில் நின்றாலும் அவருக்கான வாக்கு வங்கியில் சரிவுகள் இல்லை.

இன்ஷா அல்லாஹ் ஜனவரி 3ம் வாரமளவில் சந்திப்போம். என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதையறிய…

இனியவன்

யுவர்காத்தான்குடி