ஆளில்லா விமானம் மூலம் ‘பீஸா’ டெலிவரி – ரஷ்ய நிறுவனத்தின் புதிய திட்டம் வெற்றி!!(காணொளி)

pizza (2)– SHM

மொஸ்கோ: ரஸ்யாவின் பீஸா நிறுவனம் ஒன்று ஆளில்லா விமானம் மூலம் பீஸா ஆபகாய டெலிவரி சேவையை தொடங்கி வெற்றி பெற்றுள்ளது.ரஷ்யாவின் சைக்டைவர் பகுதியில் ‘டோடோ பீஸா’ நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் வர்த்தக ரீதியான தாரக மந்திரமே 60 நிமிடங்களுக்குள் பீஸா டெலிவரி என்பதுதான். இதனால் அங்கு நம்பர் 1 நிறுவனமாக விளங்கி வருகின்றது.

இந்நிறுவனத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் பீஸாவிற்கான ஓடரைப் பெற்றவுடன், அதன் தயாரிப்பை வாடிக்கையாளருக்கு இணையத்தளம் மூலமாக நேரடியாக ஒளிப்பரப்பு செய்வதுடன், ஒருவேளை குறிப்பிட்ட நேரத்தைவிட அதிகமாக ஆகிவிட்டால் பீஸா முழுவதும் இலவசம் என்பதுதான்.

இந்நிலையில் பீஸா டெலிவரிக்கான நேரத்தை இன்னும் குறைப்பதற்காக ஒரு புதிய யுக்தியை இந்நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ளது. அதாவது ஆளில்லா விமானம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பீஸா டெலிவரி செய்ய முடிவு செய்துள்ளது.

pizza

இந்த விமானமானது 5 கிலோ எடை வரை சுமக்கும் திறன் உடையது. மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்து பீஸா டெலிவரி செய்யும் இந்த ஆளில்லா விமானம். உலகில் முதன்முறையாக இந்த வசதியை அறிமுகம் செய்து வெற்றிபெற்றுள்ளது இந்நிறுவனம்.

சோதனை முயற்சியில் பீஸா இணைக்கப்பட்ட அவ்விமானம் வாடிக்கையாளரின் இடத்தை அரைமணி நேரத்தில் வந்தடைந்தது. பின்னர், 20 மீட்டர் உயரத்தில் இருந்து ஒரு கேபிள் மூலம் பீஸா வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்டது.

பல நாடுகள் இச்சோதனை முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும், வர்த்தக ரீதியாக டோடோ பீட்ஸா நிறுவனம்தான் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

pizza (2)

 

Published by

Leave a comment