றமழான் மாதத்தில் -அல்-மனார் நிறுவனத்தின் ஏற்பாட்டில் மாவட்ட மட்டத்தில் ஆண்களுக்கான புனித அல் குர்ஆன் மனனப் போட்டி – வெற்றி பெறுவபர்களுக்கு பெறுமதிவாய்ந்த பரிசுகள்!!

al.mananr new Quran Hiful Competetion– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி அல்-மனார் நிறுவனத்தின் ஏற்பாட்டில் அல் குர்ஆன் அருளப்பட்ட மாதமான புனித றமழான் மாதத்தில் மாவட்ட மட்டத்தில் ஆண்களுக்கான புனித அல் குர்ஆன் மனனப் போட்டிகளை 3 பிரிவுகளாக நடாத்த திட்டமிட்டுள்ளது.

அல் குர்ஆன் மனனப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுவபர்களுக்கு பெறுமதிவாய்ந்த பரிசுகள் வழங்கி வைக்கப்படவுள்ளதாக அல் மனார் நிறுவனம் அறிவித்துள்ளது.

இவ் அல் குர்ஆன் மனனப் போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் எதிர்வரும் 01-07-2014 திகதி முதல் காத்தான்குடி அல் -மனார் அறவியற் கல்லூரியின் வரவேற்பு பீடத்தில் காலை 9 .மணி தொடக்கம் பிற்பகல் 5 மணி வரை பெற்றுக்கொள்ள முடியும்.

இப் போட்டி ஜூலை மாதம் 18,19,20 ஆகிய திகதிகளில் அல்-மனார் நிறுவனத்தில் இடம்பெறும் .

போட்டி தொடர்பான மேலதிக விபரங்களுக்கு,

0652248165, 0777910209, 0776073245, 0718080156 போன்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.

al.mananr new Quran Hiful Competetion

Published by

Leave a comment