லண்டன்: சர்வதேச சுப்பர் மார்க்கட் நிறுவனமான டெஸ்கோ (TESCO), இங்கிலாந்தில் முதன்மையான சுப்பர் மார்க்கட்டுக்களில் ஒன்றாக திகழ்கின்றது. சாதாரண மக்கள் அத்தியவசிய உணவுப் பொருட்களை மலிவு விலைகளில் இந்நிறுவனத்தில் பெற்றுக்கொள்ள முடிகிறது.
இங்கிலாந்தில் டெஸ்கோ நிறுவனம் மாத்திரமல்லாது, கோப் (COOP) மற்றும் இதர சுப்பர் மார்க்கட் நிறுவனங்களும் ரமழானை வரவேற்பது மாத்திரமன்றி, அங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கும் ரமழானில் சில சலுகைகளை வழங்கி வருகின்றன.
இந்தவகையில், டெஸ்கோ நிறுவனம் ரமழானுக்கான விசேட கழிவு விலைகளை அறிமுகப்படுத்தி, முஸ்லிம் சமூகத்துக்கு முன்னுரிமை வழங்கி இருக்கின்றது. இந்நிறுவனத்தில் பல கிளைகளில் ஹலால் உணவுகள் தொடர்ந்தும் மிகச் சிறந்த முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
பல்லின சமூகம் ஒற்றுமையாக வாழும் இங்கிலாந்தில், உலக தீவிரிவாத செயற்பாடுகளால் முஸ்லிம்களுக்கு அவப்பெயர்கள் அவ்வப்போது ஏற்படுவதுண்டு.
இங்கிலாந்து சனத்தொகையில் ஆசிய இனத்தவர்கள் 7.8 வீதமும், கறுப்பினம் 3.5 வீதமும், அராபியர் 0.4 வீதமும் உள்ளனர். ஐக்கிய இராச்சியத்தில் (UK), கிறிஸ்தவப்பிரிவுகளுக்குப் பின்னர் இரண்டாவது இனமாக முஸ்லிம்கள் இருக்கின்றனர். முஸ்லிம்களின் விகிதாசாரம் 2.4% ஆகும். மதச்சார்பற்றவர்கள் 50.7 வீதத்தினர் அங்கு காணப்படுகின்றனர்.
இலங்கையில் முஸ்லிம்களின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு வரும் இந்நிலையில், இங்கிலாந்தில் வாழும் முஸ்லிம்களுக்கு, இங்கிலாந்து வழங்கும் சலுகைகளை இலங்கை அரசாங்கம் ஒருமுறை அலசிப்பார்க்க வேண்டும். அல்லது உறங்கிக் கிடக்கும் முஸ்லிம் தலைவர்கள் அரசாங்கத்துக்கு எடுத்துக் கூற வேண்டும்.
Published by



Leave a comment